பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அபிராமி அந்தாதி


மூளுகைக் கென்குறை நின்குறை
யேஅன்று முப்புரங்கள்
மாளுகைக் கம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வாணுதலே.

(உரை) திரிபுரங்களும் அழிதலின் பொருட்டுத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி படர்ந்த திருநுதலையுடைய தேவி, அடியேனை ஆட்கொண்டருளுதற்கு நின் திருவடித் தாமரை மலர்கள் இருக்கின்றன; காலன்பால் செல்லாமல் மீண்டு உய்வதற்கு உபகாரமாக நின் கடாக்ஷவீக்ஷண்யம் இருக்கிறது; இவற்றின்பால் கருத்தைப் பொருத்துகைக்கு இன்னும் காலம் வராமல் இருப்பது என் குறைதான்; நின் திருவருட்குறை அன்று.

நான் முயலத் தொடங்கியவுடன் அருள் செய்கைக்கு. நீ காத்திருக்கின்றா யென்றபடி, விழியின் கடை, கடைக்கண் பார்வைக்கு ஆயிற்று.

39

வாணுதற் கண்ணியை விண்ணவர்
யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெரு
மாட்டியைப் பேதைநெஞ்சிற்
காணுதற் கண்ணியள் அல்லாத
கன்னியைக் காணும் அன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்
றோமுன்செய் புண்ணியமே.

(உரை) ஒளி பொருந்திய நெற்றியிலே திருவிழி படைத்தவளை, தேவர்களெல்லோரும் வந்து வழிபட்டுப் பூசை செய்ய நினைத்ததற்கு லட்சியமாகிய எம் தலைவியை, அறியாமையையுடைய நெஞ்சினாற் காண்பதற்கு அருகே உள்ளவள் அல்லாத கன்னிகையைத் தரிசித்துப் பேறு