பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

41

நூபுரமோ ஆரணங்க ளனைத்துமே" (தக்க. 119}; "ஆரணநூ புரஞ்சிலம்பு மடிகள் போற்றி" (திருவிளையாடல். காப்பு); “வேதங்க ளொருநான்கு மெல்லடிமேல் வியன் சிலம்போ" (பாசவதைப் பரணி, 192).

42

பரிபுரச் சீறடிப் பாசாங்
குசைபஞ்ச பாணிஇன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர
மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்
குனிபொருப் புச்சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர்செம்
பாகத் திருந்தவளே.

(உரை) சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும் பாசாங்குசத்தையும் உடையவள்; ஐந்து மலர்ப் பாணங்களைத் தரித்தவள்; இனிய சொல்லையுடைய திரிபுரசுந்தரி: சிந்துரம்போலச் சிவந்த திருமேனியை உடையவள்; நெஞ்சினால் நினைந்து தேவர்களுக்குத் தீங்குகள் செய்த திரிபுரத்தில் உள்ள வஞ்சகராகிய அசுரர்களை அஞ்சுவிக்க வளைத்த மேருமலையாகிய வில்லையுடைய திருக்கரத்தையும் நெருப்பை யொத்த திருமேனியையும் உடைய சிவபிரானது ஒத்த ஒரு பாதியில் எழுந்தருளி இருந்தவளாகும்.

பாசாங்குசை, பஞ்சபாணி ; 77. சிந்துர மேனியள், இருந்தவளென்று முடிக்க. சிந்துர மேனியள்: 1, 6, 7, "செம்பாகம்-நேர்பாதி;

"தம்பிரான் றிருமேனியிற் செம்பாதி யுங்கொண்ட தையனாயகி” (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், செங்கீரை. 2).

43

தவளே இவள்எங்கள் சங்கர
னார்மனை மங்கலமாம்
அவளே அவர்தமக் கன்னையும்
ஆயினள் ஆகையினால்