பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

45

தன்று; வாயினால் இப்படி இருப்பதென்று உரைப்பதற்கும் உரியதன்று; கடலேழும் உலகேழும் பெரிய அட்டகுலா சலங்களும் அணுகாமல், இரவையும் பகலையும் முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது அப்பொருள்.

பேரின்ப வாழ்வு வாழ்வதற்குப் பற்றுக்கோடாகிய ஒன்று என்றபடி. மனத்தாலும் வாக்காலும் அணுகுதற் கரியவள் பராசக்தி; ‘மனோவாசாம கோசரா' (லலிதா, 415). வேலையேழும் நிலமேழும் என்று தனித்தனியே கூட்டுக. சூழ்தல் செய்தல்; “காலைசூழ் செங்கதிர்"

(தக்க. 279} என்பதனையும் அதன் உரையையும், 'பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறும், இரவுச் செய்யும் வெண்டிங்களும்” (மதுரைக் காஞ்சி, 7-8) என்னும் வழக்கையும் அறிக. திவாகரன் என்பது பகலைச் செய்வோனென்ற பொருள் பட்டுச் சூரியனுக்கு ஆதலையும் காண்க. அம்பிகை சந்திர சூரியரிடையே எழுந்தருளியிருத்தலை, 20, 34, 44-ஆம் செய்யுட்களாலும் உணரலாம்.

47

சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்
கொடியைப் பதித்துநெஞ்சில்
இடரும் தவிர்த்திமைப் போதிருப்
பார்பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும்
தோயும் குரம்பையிலே.

(உரை) பிரகாசிக்கும் கலைகளையுடைய பிறை பொருந்திய சடையோடு கூடிய திருமுடியையுடைய மேருமலை போன்ற சிவபெருமானோடு இணைந்து படர்கின்ற மணமுள்ள பகங்கொடியாகிய அபிராமவல்லியைத் தம் நெஞ்சில் தியானித்து, அதனால் துன்பம் நீங்கி, இமைக்கும் ஒரு கணப்-