பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

47

நாளெல்லையை இங்கே வரம்பு என்றார். கையமைத்தல், அபயக் குறிப்பு: “தோன்றுந் திதியமைப்பில்" (உண்மை விளக்கம்), 'ரம்பாதி வந்திதா' (741) என்பது லலிதாம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. நரம்பு-ஸ்வரஸ்தானமெனலும் ஆம். அம்பிகை யமபயத்தை

நீக்குபவளென்பதை, "யமபட ரெனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்று கொளுங்குயில்" (தேவேந்திர சங்க வகுப்பு) என்பதனாலும் உணரலாம்.

49

நாயகி நான்முகி நாரா
யணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி
சாமளை சாதிநச்சு
வாய் அகிமாலினி வாராகி
சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள்
சரணம் அரண்நமக்கே.

(உரை) ஈசுவரி, நான்கு முகங்களை உடையவள். நாராயணி, கைத்தாமரையில் ஐந்து மலரம்புகளைத் தரித்தவள், சம்புவின் மனைவி, சங்கரி, சாமளை, நஞ்சை வாயிலே உடைய நல்ல சாதிப் பாம்பை மாலையாக உடையவள். வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆகிய புகழை உடையவளாகிய அபிராமியின் திருவடிகள் நமக்குப் பாதுகாப்பாம்.

அம்பிகையே பிரமாவிடத்தும் திருமாலிடத்தும் இருந்து சிருட்டி, திதியாகிய தொழிலை நடத்துதலின் நான்முகி யென்றும் நாராயணி யென்றும் கூறினர். பிரம்ம சக்தியைப் பிராம்மி என்றும், விஷ்ணு சச்தியை வைஷ்ணவி யென்றும் கூறுவர். நான்முகி-நாகினியென்னும் அம்பிகையின் மூர்த்தி யெனலுமாம்; ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த்