பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அபிராமி அந்தாதி

தாமரையில் காகினியென்னும் திருநாமத்துடன் பொன்னிறம் பூண்டு நான்கு முகங்களோடு அம்பிகை வீற்றிருப்பதாகக் கூறுவர் யோக நூலார்; 'சதுர்வக்த்ர மனோஹரா' (லலிதா. 505).

நாராயணி: ஸுபார்சுவமென்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் தேவியின் திருநாமம் என்பர்; நாராயணன் தங்கையுமாம்.

சாம்பவி-சம்புவின் சக்தி, சங்கரி - இன்பத்தை உண்டாக்குபவள். சாமளை-சாமள நிறம் பொருந்தியவள். அது ஒருவகைப் பச்சை நிறம். அகி - பாம்பு, அம்பிகை பாம்பை ஆபரணமாக உடையவள்; "சோதி படலசூடி காகோடி பணிமதாணி மார்பாளே" (தக்க. 105); "நாக பூஷணத்தியண்டம் உண்ட நாரணி" (திருப்புகழ்).

வாராகி;77: விஷ்ணு சக்தி வகையில் ஒன்று. அம்பிகையின் அமிச சக்திகளுள் தண்டினி என்னும் பெயருடையவள். த்ரிபுரா சித்தாந்தமென்னும் நூல், 'பராசக்தி வராகானந்த நாதர் என்பவருக்கு வராகத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையின் வாராகியென்னும் பெர் பெற்றாள்' என்று கூறும். தமிழில் வராகியை 32 செய்யுட்களால் துதிக்கும் மாலை ஒன்று உண்டு. சூலினி - திரிசூலத்தைத் தரித்தவள் : 77.

மாதங்கி: மதங்கமுனிவரின் குமாரி; யாழ்ப்பாணர்களாகிய மதங்கர் குலத்துப் பெண்ணாகத் தோன்றியவ ளெனலுமாம் (70) ; "மாதங்கி வேதஞ்சொல் பேதைநெடு நீலி" (திருப்புகழ்.) கியாதி - புகழ்.

50

அரணம் பொருள்என் றருள்ஒன்
றிலாத அசுரர் தங்கள்
முரண்அன் றழிய முனிந்தபெம்
மானும் முகுந்தனுமே