அபிராமி அந்தாதி
49
சரணம் சரணம் எனநின்ற
நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும்எய்
தார்இந்த வையகத்தே.
(உரை) பொன் வெள்ளி இரும்பு என்பவற்றாலாகிய திரிபுர மதில்களே உண்மையான செல்வமென்று எண்ணி இரக்கம் சிறிதும் இல்லாத வித்யுன்மாலி, தாரகாக்ஷன், வாணன் என்னும் மூன்று அசுரர்களுடைய வலிமையும் அன்றொரு நாள் அழிந்துபோகும்படி கோபித்த பெருமானாகிய சிவபிரானும் திருமாலுமே, 'நின் திருவடியே எமக்குப் புகல்' என்று கூறாநிற்க, நின்ற தலைவியின் அடியார்கள் இறப்பு, பிறப்பு என்னும் இரண்டையும் இவ் வுலகத்தில் அடையார்.
பொருள் - உறுதிப் பொருளுமாம். அன்று: பண்டறி சுட்டு. சரணம் சரணம்- அடைக்கலம் அடைக்கலம் என்று கூறினும் பொருந்தும். இருவரும் பணிதல்: 7, 56..
வையம் துரகம் மதகரி
மாமகு டம்சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை
ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள்அடித்
தாமரைக் கன்புமுன்பு
செய்யும் தவம்உடை யார்க்குள
வாகிய சின்னங்களே.
(உரை) தேர், குதிரை, மதம் மிக்க களிறு, பெரிய கிரீடம், பல்லக்கு, பிற மன்னர்கள் திறையாக வழங்கும் பொன், மிக்க விலையையுடைய பொன்னாரம், முத்துமாலை என்பன, பிறையைத் திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்கு,