பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அபிராமி அந்தாதி

முன் பிறவிகளில் அன்பு செய்த தவமுடைய அடியார்களுக்கு உண்டாகிய அடையாளங்களாம்.

தேவியை முற்பிறப்பில் வழிப்பட்டவர்கள் இந்தப் பிறப்பில் சக்கரவர்த்திகளாகத் திகழ்வரென்பது கருத்து.

வையம்-தேர். காலாளையும் கூட்டிக்கொள்க. நாற்படையும் முடியும் சிவிகையும் திறைப் பொருளும் உடையார் முடிமன்னர். 'ஸாம்ராஜ்ய தாயினி' (692) என்பது - லலிதாம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.

52

சின்னஞ் சிறிய மருங்கினில்
சாத்திய செய்யப்பட்டும்
பென்னம் பெரிய முலையும்முத்
தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும்கண்
மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந் தனிஇருப் பார்க்கிது
போலும் தவம் இல்லையே.

(உரை) தேவி மிகச் சிறிய தன் திருவிடையிலே சாத்திய சிவந்த பட்டாடையையும், மிகப் பெரிய நகிலையும், அவற்றின்மேல் அணிந்த முத்து மாலையையும், பிச்சிமலர் நெருங்கிய மிகக் கரிய கூந்தலையும், மூன்று கண்களையும் தம் சிந்தையிலே தியானித்துத் தணித்திருந்து யோகம் செய்வாருக்கு இங்ஙனம் தியானிக்கும் செயலையன்றி வேறு பயனுடைய தவம் ஒன்று இல்லை.

தியானமே பெரிய தவம் என்றவாறு. சின்னஞ் சிறிய, பென்னம் பெரிய, கன்னங் கரிய, தன்னந்தனி: வழக்குத் தொடர்கள்; "சின்னஞ் சிறியோர் சிதைவே செயினும், பென்னம் பெரியோர் பிழைசெய் குவரோ, கன்னங் கரியோன் மருகா கழியத், தன்னந் தனியேன் றனையாண்டவனே" (பழம் பாட்டு). பட்டு:37-ஆம்செய்யுட் குறிப்பைப்