பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

51

பார்க்க. முத்தாரம்: 9, 37, 42. பிச்சி மொய்த்த குழல்: “பிச்சிமலர்க் கொந்தளபாரை, அறவி" (திருப்புகழ்). கண்மூன்று: 73, 101: 'த்ரிநயனா', 'த்ரிலோசனா'.. 'த்ரயம்பிகா' (லலிதா, 453, 477, 726.)

53

இல்லாமை சொல்லி ஒருவர்தம்
பாற்சென் றிழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவி
ரேல்நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்
பால்ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே.

(உரை) மக்களே, ஒரு செல்வரிடத்திலே போய், உங்களுடைய வறுமை நிலையைச் சொல்லி அவர்களால் அவமானப்பட்டு நில்லாத நிலை வேண்டுமென்று நெஞ்சில் கருதுவீர்களானால், தினந்தோறும் உயர்ந்த தவத்தைப் பயிலாமையைக் கற்ற இழிகுணத்தவரிடம் ஒருபொழுதும் செல்லாத பெருமிதத்தை என்பால் அருளிவைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளைப் புகலாக அடைவீர்களாக.

இல்லாமை-பொருள் இல்லாத வறுமை. நித்தம் கற்ற எனக் கூட்டிப் பொருளுரைத்தலும் ஆம். சேர்தல்- இடைவிடாது நினைத்தலுமாம்; "மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்" (குறள்) என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையைக் காண்க. அம்பிகையைத் தியானித்தால் வறுமை தீரும் என்பதாம்.

54

மின்னா யிரம்ஒரு மெய்வடி
வாகி விளங்குகின்ற
அன்னாள் அகமகிழ் ஆனந்த
வல்லி அருமறைக்கு