பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

53

பொன்றாது நின்று புரிகின்ற
வாஇப் பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றபெம்
மானும்என் ஐயனுமே.

(உரை) ஒரு பொருளாகிய பராசக்தியாய்த் தோன்றிப் பல பல சக்திகளாகி விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றவளாய், அவ்வனைத்துப் பொருள்களையும் நீங்கி நிற்பவளாகிய அபிராமி என் கருத்துக்குள்ளே நீங்காமல் நிலைபெற்று விரும்பியருள்வது என்ன வியப்பு! இக் கருத்தை அறிவார் பிரளய காலமாகிய அன்று ஆலிலையில் யோகத்துயில் கூர்ந்த பெருமானாகிய திருமாலும், என் தந்தையாகிய சிவபிரானுமே யாவர்.

ஒன்றும் பலவுமாதல்: 'யாவையுமாம் ஏகம்-பராசக்தி' (திருக்கோவையார், 71, உரை.) பல:30, குறிப்பு. புரிதல். விரும்புதல். இப்பொருள்- இந்தப் பரம்பொருளாகிய தேவியை எனலும் ஆம்.

56

ஐயன் அளந்த படிஇரு
நாழிகொண் டண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும்
போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை
யும் கொண்டு சென்றுபொய்யும்
மெய்யும் இயம்பவைத் தாய்இது
வோஉன்றன் மெய்யருளே.

(உரை) தேவி, சிவபிரான் அளந்து அளித்த இரண்டு படி நெல்லைக் கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கிப் பிழைக்கும்படி தர்மம் செய்கின்ற நின்னையும் துதித்து, மானிடராகிய செல்வர் ஒருவரிடத்தில் அவரைப் பாடிய செம்மையும் பசுமையும் உடைய தமிழ்ப்பாமாலையையும் கைக்கொண்டு போய்ப் பொய்யையும் மெய்யையும் கலந்து