பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அபிராமி அந்தாதி

சொல்லும்படி அடியேனை வைத்தாய்; இதுவா நின் உண்மையான திருவருள்?

காஞ்சிபுரத்தில் இறைவன் அருளிய இரு நாழி நெற்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் அம்பிகை வளர்த்தாளென்பது புராண வரலாறு. "தொல்லை மறை தேர் துணைவன்பால் யாண்டுவரை, எல்லை யீருநாழி நெற்கொண்டோர்- மெல்லியலாள், ஓங்குலகில் வாழும் உயி ரனைத்து மூட்டுமால், ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை" (பழம்பாடல்); “அபிராமி எக்கு லங்குடி லோடுல கியாவையும் இற்பதிந்திரு நாழி நெலாலறம் எப்பொதும் பகிர்வாள்", "இருநாழி படிகொ டறங்காத்த மாபரைச்சி” (திருப்புகழ்), செம்மை - இலக்கணங்களால் குறைவின்மை, பசுமை-புதுமை. பொய்யென்றது உயர்வு நவிற்சிப்படப் புகழ்தலை. தடுத்தாட்கொள்ளாமல் வாளா இருத்தலினால் பொய்யும் மெய்யும் இயம்பும் நிலை வந்ததென்னும் கருத்தால், 'இயம்ப வைத்தாய்' என்று அம்பிகையைக் காரண பூதையாக்கினார்.

57

அருணாம் புயத்தும்என் சித்தாம்
புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல்நல்
லாள்தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம்
புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும்அல் லால்கண்டி
லேன்ஒரு தஞ்சமுமே.

(உரை) செந்தாமரை மலரிலும் என் உள்ளத் தாமரையிலும் எழுந்தருளியிருக்கும், தாமரை அரும்பு போன்ற நகிலையுடைய பாலாம்பிகையின் அழகு சேர்ந்த கருணை விழியாகிய தாமரையும், திருமுகத் தாமரையும், திருக்கர