பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

55

மலரும், திருவடிக் கமலமும் ஆகிய பற்றுக்கோடுகளையன்றி வேறொரு பற்றுக்கோட்டையும் யான் அறிந்திலேன்.

அருணாம்புயத்து அமர்ந்திருத்தல்: "அம்புயமேல் திருந்திய சுந்தரி" (5) என்பதன் குறிப்பைப் பார்க்க. சித்தாம்புயம் - இருதய கமலம். தருணாம்புயம் - தாமரையரும்பு: தருணம் - இளமை. தையல் - பாலாம்பிகை; அலங்காரத்தையுடையவள் எனலுமாம்.

58

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல
தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி
லேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்கலராகநின்
றாய் அறியாரெனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார்அடி
யார்பெற்ற பாலரையே.

(உரை) நீண்ட தன வில்லும், ஐந்து. அம்புகளும் முறையே கரும்பாகவும் மலராகவும் கைக்கொண்டு நின்ற “தேவி, இஃதன்றி வேறு பற்றுக்கோடு இல்லை யென்று நின்னைத் தியானிக்கும் தவ வழியில் மனத்தைப் பழகும்படி செய்ய எண்ணினேன் இல்லை: பஞ்சை மிதிப்பதாயினும் அஞ்சுகின்ற மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற பிள்ளைகள் அறியாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கமாட்டார்கள்.

அதுபோல நீ என்னைப் புறக்கணித்துத் தண்டியாமல் அருள் புரிய வேண்டுமென்பது கருத்து. இதன்கண் வேற்றுப்பொருள் வைப்பணி வந்தது, பஞ்சு - செம் பஞ்சுக் குழம்புமாம். பஞ்சஞ்சம் மெல்லடியார்: 'பஞ்செனச் சிவக்கு மென்காற் றேவி” (கம்ப ராமாயணம், வீடணன் அடைக்கலப்.)

அபிராமி - 6