பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அபிராமி அந்தாதி

 கரங்களும், திருமுகங்களும் முறையே பன்னிரண்டும் ஆறும் என்று அமைய அவதரித்த பழைய ஞானத்தையுடைய குமாரனும் உண்டாகியதல்லவா?

வல்லபம் உண்டாயது அன்றோ என்க. தவத்திரு வேடம் பூண்ட சிவபெருமான் அக்கோலம் நீங்கி இன்புற்றதோடு அதன் பயனாக ஒரு குழந்தையையும் பெற்றானென்பதைக் குறித்து நின்றது. 'மகனும்' என்பதிலுள்ள இறந்தது தழீஇய எச்சவும்மை. தவப்பெருமான்: “தாழ் சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" (புறநானூறு, கடவுள்.) வல்லபம் - வலிமை.

65

வல்லபம் ஒன்றறி யேன்சிறி
யேன்நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றி
லேன்பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்
பாய்வினை யேன்தொடுத்த
சொல்அவ மாயினும் நின்திரு
நாமங்கள் தோத்திரமே.

(உரை) பசும்பொன் மலையாகிய மேருவை வில்லாகக் கொண்ட சிவபெருமானுடன் கவலையின்றி எழுந்தருளியிருக்கும் தேவி, அறிவாற்றல் ஒன்றையும் அடியேன் அறிய மாட்டேன்; சிற்றறிவினனாகிய யான் எங்கும் வியாபித்த நின் திருவடியாகிய சிவந்த தளிரையல்லாமல் வேறொரு பற்றை யுடையேன் அல்லேன்: தீவினையையுடைய யான் அந்தாதியாகத் தொடுத்த சொற்கள் பொருளில்லாத வீண் சொற்களாயினும் இடையிடையே வைத்த நின் திருநாமங்கள் தோத்திரமாக உதவும். (ஆதலின் நான் தொடுக்கும் அந்தாதி பயன் உடையதேயாம்).

வல்லபம்-கல்வியாற்றல் எனலும் ஆம், மலரடி-மலர்ந்த அடி. வீற்றிருத்தல்-கவலையின்றியிருத்தல்; தனிச் சிறப்புடன் இருத்தலுமாம்.

66