பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அபிராமி அந்தாதி

(திருப்புகழ்), கண்ணுக்குக் குளிர்ச்சி தருதலின், 'மண் களிக்கும் பச்சை வண்ணம்' என்றார். மதங்கர் 'குலப் பெண்ணாகத் திருவவதாரம் செய்தது பற்றி மாதங்கி என்னும் திருநாமம் தேவிக்கு வழங்கும் (50).

70

அழகுக் கொருவரும் ஒவ்வாத
வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்
தாள்பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள
யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ் சேஇரங்
கேல்உனக் கென்குறையே.

(உரை) கழிந்ததற்கு வருந்தி நின்ற நெஞ்சமே, தன் அழகுக்கு வேறு யாரும் ஒப்பற்ற கொடிபோன்ற அபிராமி, அரிய வேதங்களிலே பயிலுவதனால் சிவந்த திருவடி மலர்களை யுடையாள். குளிர்ச்சியும் பெருமையும் உடைய பிறையைத் திருமுடியிலே சூடும் மெல்லியலாகிய யாமளை யென்னும் கற்பகப் பூங்கொம்பு இருக்கும் போது நீ வருந்துவதை ஒழிவாயாக; உனக்கு வரும் குறை யாதுளது?

மறைகளின் அடியிலும் நடுவிலும் முடிவிலும் நின்று பழகி அதனாற் கன்றிச் சிவந்த திருவடி. பிறையணிந்த முடியினள்: “ஒளிர் மதிச்செஞ் சடையாளை" (84); 'சாரு சந்த்ர கலாதரா' (லலிதா. 243); “இமயக் கிழவி. தனிக்கண் விளங்கும் நுதற்பிறை மேலோர், மிகைப்பிறை கதுப்பிற் சூடி" (ஆசிரிய மாலை); "சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக், குவளை யுண்கட் பவளவாண் முகத்தி" (சிலப்.-23: 1-2); "தருணவா ணிலாவீசு சடிலமோலி மாகாளி"

(தக்க. 107). கோமள யாமளை: 33.

71