பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

65



என்குறை தீரநின் றேத்துகின்
றேன் இனி யான்பிறக்கின்
நின்குறை யேஅன்றி யார்குறை
காண்இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீராங் கோன்சடை
மேல்வைத்த தாமரையே.

(உரை) அகன்ற உயர்ந்த வானத்தின்கண் மின்னலுக்கு ஒரு குற்றத்தைக் கற்பித்து அதனினும் மெலிந்து நின்ற நுணுகிய திருவிடையையும் மென்மையாகிய இயல்பையும் உடையாய், எம்பிரானாகிய சிவபெருமான் நின் ஊடல் கண்டு தன் குறையை நீக்கி அவ்வூடலைத் தீர்க்கும் பொருட்டு நின்னை வணங்கித் தன் சடாபாரத்தின் மேல் வைத்த நின்றன் திருவடித் தாமரைகளையே என் குறைகள் நீங்கும் படி நின்று துதிக்கின்றேன்; இனிமேல் யான் பிறவியை அடைந்தால் அது நின் குற்றமே; அல்லாமல் வேறு யார் குற்றம்?

நின்னை வாழ்த்தும் என் பிறவித் துன்பத்தைத் தீர்த்தல் நின் கடமை என்றவாறு. நேர்தல்-நுணுகுதல், மெல்லியல்-கோமளை. எங்கோன் சடைமேல் வைத்த தாமரை: 11, 35, 60.

72

தாமம் கடம்பு படைபஞ்ச
பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும்
பொழுதெமக் கென்றுவைத்த
சேமம் திருவடி செங்கைகள்
நான்கொளி செம்மைஅம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ
டிரண்டு நயனங்களே.