பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அபிராமி அந்தாதி

(உரை) அபிராமி அம்மைக்கு உரிய மாலை கடம்பு; ஆயுதம் பஞ்சபுட்ப பாணம்; வில் கரும்பு; அவளுடைய மந்திர சாதகர்களாகிய பைரவர்கள் அவளைத் துதிக்கும் காலம் அர்த்த யாமம்; எமக்கு உய்வைத் தருவதற்கு என்று வைத்த பாதுகாப்பு அவள் திருவடி; அவளுடைய சிவந்த திருக்கரங்கள் நான்கு; திருமேனியின் ஒளி சிவப்பு: திருநாமம் திரிபுரை என்பது; கண்கள் மூன்று ஆம்.

கடம்பு: 26. வயிரவர் : 'மயான வாசினியது மந்திர சாதகரான பைரவ வேஷதாரிகள்' (தக்க, 51, உரை); "இறைவி பைரவர்களே”

(தக்க. 429); சிவபெருமானுமாம்; 'மகா பைரவ பூஜிதா', 'மார்த்தாண்ட பைரவாராத்யா' (லலிதா. 231, 785). சேமம் திருவடி: "சரண மரணமக்கே ” (50) என்றார் முன்னும். ஒளி செம்மை : முதற் செய்யுளைக் காண்க. மூன்று கண்கள்: 53-ஆம் செய்யுட் குறிப்பைக் காண்க.

73

நயனங்கள் மூன்றுடைநாதனும்
வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம
வல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் பாவையர்
ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக்
காவினில் தங்குவரே.

(உரை) மூன்று கண்களையுடைய சிவபிரானும் வேதங்களும் திருமாலும் பிரமதேவனும் புகழ்ந்து பாராட்டுகின்ற அபிராமவல்லியின் இரண்டு திருவடிகளையே முக்தியாய பயனென்று கொண்டு தியானிப்பவர், அரம்பை மகளிர் நடம் புரியவும், பாடல்களைப் பாடவும் அவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்றுப் பொன்னிறம் பெற்ற பாயலில்