பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அபிராமி அந்தாதி

கொள்க. மாலினி-மாலையை அணிந்தவள் (லலிதா . 445); அக்ஷரங்களின் தெய்வமாக இருப்பவளெனலும் ஆம். சூலி: 50, வராகி: 50.

77

செப்பும் கனககலசமும்
போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம
வல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும்
விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்
தேன்என் துணைவிழிக்கே.

(உரை) தந்தத்தாற் கடைந்த செப்பும், பொற்கலசமும் போன்ற அழகிய நகிலின்மேல் அப்பிய கலவைச் சந்தனத்தையுடைய அபிராமவல்லி காதில் அணிந்த முத்துக்கொப்பையும், வயிரக்குழையையும், திருவீழியின் கொழுத்த கடைசியையும், பவளம் போன்ற திருவாயையும், அதன்கண் மலர்ந்த புன்னகையாகிய நிலவையும் என் இரண்டு கண்களிலும் எழுதி வைத்தேன்.

தியானத்தின் வன்மையினால் எங்கே நோக்கினும் அங்கே திருக்கோலம் தோன்றுதலின் கண்ணில் எழுதி வைத்தேனென்றார்; "கருணை வதன பற்பமும் கமலவிழியும் "விழியு மனமும் எழுதி” (முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ். முத்தப். 20) எனப் பிறரும் விழியில் எழுது தலைக் கூறுதல் காண்க. |

கொப்பு-மேற்காதில் அணிவது;"காதுக்கொர் தமனியக் கொப்பு மிட்டு" (மீனாட்சி, செங்கீரைப். 1)

78

விழிக்கே அருளுண்டபிராம
வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்
டெமக்கவ் வழிகிடக்கப்