பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அபிராமி பட்டர்

அன்று அமாவாசைக்கு அடுத்த பிரதமை. தஞ்சைச் சரபோஜி மன்னர், காவிரிப்பூம்பட்டினத்தில், சங்கமுகத்துக்குச் சென்று நீராடிவிட்டுத் திரும்புகாலில், திருக்கடவூரில் அமிர்த கடேசுவரரையும் அபிராமி யம்பிகையையும் தரிசிக்கத் தங்கினார். அரசர் தரிசனத்துக்கு வருகிறார் என்று அறிந்து கோயிலில் சிறப்பான ஆராதனைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அரசர் தம் பரிவாரங்களுடன் ஆலயத்துக்கு வந்தார். சுவாமி சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்துகொண்டு அபிராமி அம்பிகையின் சந்நிதிக்கு வந்தார். அரசர் வருவதை அறிந்து யாவரும் விலகி நின்று மரியாதை செய்தனர். அங்கே பூஜை தொடங்கியது.

அப்போது அம்பிகையின் சந்நிதியில் ஒருவர் கண்ணை மூடியபடியே நின்று கொண்டிருந்தார். அவர் அரசர் வந்ததையோ, அவர் வரவால் நிகழும் ஆரவாரங் களையோ கவனித்தவராகத் தோன்றவில்லை. யாவரும் அரசர் வந்ததை அறிந்து ஒதுங்கி நின்று மரியாதை காட்டும்போது, அவர் மாத்திரம் நின்றபடியே தூண் போல இருந்தார். அவரைக் கண்டு சிலருக்குக் கோபம் வந்தது. அரசர் முன்னிலையில் அவரை என்ன செய்ய முடியும்? -

அரசரும் அவரைக் கவனித்தார். எல்லோரும் பரபரப்புடன் இருக்க, அவர் கண்ணை மூடியபடியே எதையும் கவனியாமல் இருப்பதைக் கண்டு அரசருக்கே வியப்பாக இருந்தது. அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து,"இவர் யார்?" என்று கேட்டார். அவர், "இவர் ஒரு