பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம் - 121

உடம்பிலுள்ள அங்கங்களுக் கெல்லாம் முன்பு வேலை இருந்தது. இப்போது வாக்கும் மனமும் தொழிற்பட்டன. கடைசியில் வாக்கும் நின்றது; மனம் மாத்திரம் அவள் புகழை எண்ணத் தொடங்கிவிட்டது. செயல் மிகுதியாக இருக்கும்போது அநுபவம் குறைவாக இருக்கிறது; அநுபவம் மிகுதியாகும்போது செயல் குறைகிறது. செயல் மிகுதியினால்தான் அநுபவம் உண்டாகிறது என் பதை மறக்கக் கூடாது? அதுதான் அஸ்திவாரம் வேலையை விட்டு நீங்கின பிறகு பென்ஷன் வருகிறது: வேலை செய்யாமலே மாதந்தோறும் பணம் கிடைக்கிறது. ஆனால் பல ஆண்டுகள் வேலை செய்ததன் பயனாகவே இப்போது வேலை செய்யாமல் இருக்கும் நிலையும் பென்ஷ னும் கிடைக்கின்றன. நிறையப் பென்ஷன்" பெறுகிறவன் வேலை செய்த காலத்தில் ஒடியாடி உழைத் ததை நினைப்பது இயல்பு. அபிராமிபட்டர் அப்படித் தான் இங்கே நினைக்கிறார்.

முன்பு செயல் மிகுந்து இருந்ததையும் வர வர அது குறைந்து வந்ததையும் பாட்டிலுள்ள சொல்லமைதியே காட்டுகிறது. தொண்டர் கூட்டத்தைத் தேடி நாடிச் சென்று பழகும்போது அவர் செய்ததைப் பல சொற் களால் சொல்கிறார். : -

பகல் இரவா கண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து. - இதை நீட்டி முழக்கி ஆறு சொற்களால் சொல்கிறார், அடுத்தபடி செய்ததையும் அப்படியே சொல்கிறார்.

கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் அப்பால் முயற்சி குறைகிறது; இடம் குறைகிறது:

கருவிகள் குறைகின்றன; அதைக் குறிக்கும் சொற்களும் குறைகின்றன. . -