பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 .. அபிராமி அந்தாதி

கற்பது உன் காமம்.

உட்கார்ந்தபடியே அபிராமிபட்டர் லலிதா சகசிர நாமத்தைப் பாராயணம் செய்யும் காட்சி நமத்குப் புலனா கிறது. அவர் வாய் சொல்கிறது; கண் கசிகிறது. அடுத்த நிலையும் சுருக்கந்தானே?

கண்ணியது உன் புகழ்

என்று சுருக்கமாகவே அதைச் சொல்லிவிடுகிறார்.

முடிவிலிருந்து முதலைப் பார்க்கிறார். நாம் முதலி விருந்து முடிவைப் பார்த்தால் சத்சங்கமும், பாத சேவை யும், நாம பாராயணமும், தியானமும் வரிசையாக வரும். அவர் உள்ளே இருந்து தலைவாசலைப் பார்க்கிறார். இதோ கூடம், இதோ இடைகழி, அதோ வாசல் என்று. t திருமடைப் பள்ளியிலிருந்து காட்டுகிறார். அவர் அங்கே. உண்டு ஏப்பம் விடுகிறார்.

- இதுவரையில் அவரால் பார்க்க முடிந்தது. காரிய மாகிய விளைவுக்குரிய காரணம் இன்னதென்று. நினைத்துச் சத்சங்கத்தில் வ்ந்து நின்றார். அதற்குக் காரணம் என்ன? அதற்குமேல் அவரால் நினைக்க முடியவில்லை. தொண்டர்களோடு சேர்ந்து பழகிய தற்குக் காரணம் பூர்வ ஜன்ம ஸம்ஸ்காரம் என்று ஊகித் தார். இதுவரையில் செயலும் விளைவும் அடுக்கடுக்காகத் தெரிந்ததுபோல அந்தக் காரணம் இன்னதென்று தெளி: வாகத் தெரியவில்லை. முன்னைப் பிறவியில் செய்த புண் னியப் பயனாகவே இந்தப் பிறவியில் சத்சங்கம் கிடைத். தது. அதிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாகப் பல நிகழ்ந்தன.

முன்னைப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தார்? அதை எண்ணிப் பார்க்கும் ஆற்றல் இல்லை, அஸ்திவாரத்