பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம் 123.

தைப் போல அது மறைவில் நிற்கிறது. அந்தப் புன்னி' யம் இன்னதென்று தெரியாவிட்டாலும் அது காரணமாகத். தான் இந்தப் பிறவியில் அடுக்கடுக்காக எல்லாம் கை கூடி வந்திருக்கின்றன என்பது மட்டும் தெரிகிறது. அந்தப் புண்ணியம் ஏதாக இருக்கலாம்? . - . . . .

யாரைக் கேட்கிறது? அம்பிகையையே கேட்கிறார். நான் முன் செய்த புண்ணியம் ஏது? என் அம்மே!

"தாயே, நான் ஏதோ புண்ணியம் செய்துதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி எனக்குச் சித்திக்க நியாயம் இல்லை. அந்தப் புண்ணியம் யாது? என்கிறார். -

புண்ணியம் செய்தனமே மனமே"

என்று பின்பு ஒரு பாடலில் பெருமிதத்தோடு சொல். விக் கொள்வார். - - -

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று ஞானசம்பந்தரும் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

பூரீமாதாவும் லோகஜனணியும் ஆகிய அபிராமியை நோக்கிக் கேட்கிறார் அபிராமிபட்டர். -

கான் முன் செய்த புண்ணியம் ஏது? என் அம்மே, .. புவி ஏழையும் பூத்தவளே!

முற்பிறவியில் புண்ணியம் செய்தார்க்கு இந்தப் பிறவியிலே தொண்டர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பேறு கிட்டுமென்றும், அதனால் இறைவியின் பாதார விந்தத்தைப் பக்தியுடன் பணியும் பழக்கம் உண்டாகு மென்றும், அதன் பயனாக அவளுடைய திருநாமத்தைக்