பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாபெருந் தெய்வம்

உலகம் ஏழையும் பூத்தவளாகிய அபிராமியின் பேரருள் வெள்ளத்தில் ஆழ்ந்த அபிராமிபட்டர் அம்பிகை யின் நிலைகளைச் சற்றே எண்ணிப்பார்க்கிறார். அவளைப் புவி ஏழையும் பூத்தவள் என்று சென்ற பாட்டில் பாடி முடித்தார். அவள் உலகத்தை உண்டாக்கும் அளவோடு நிற்பவளா? படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையுமே அவள் இயற்றுகிறாள்.

பிரம்மாவினிடம் படைத்த தொழில்ைச் செய்வதற் குரிய ஆற்றலாகப் பொருந்தியிருக்கிறாள். பிரமதேவ னுடைய உருவம் வேறாக இருந்தாலும் அந்த மூர்த்தியின் உள் இருந்து இயக்கும் சக்தியாக அம்பிகை இருக்கிறாள். பிரமணிடமிருந்து அந்தச் சக்தி பிரிந்து விட்டால் அவன் படைக்க முடியாது. அவனுடைய உள்ளத்தில் உணர் வேற்றி நாவில் கலையேற்றிக் கையில் உரமேற்றி அவனைப் படைப்புத் தொழில் செய்பவனாக ஆக்கி, உள் இருந்து இயக்குபவள் மகாசக்தியாகிய அம்பிகையே, ஆதலின் அவளை மீட்டும், -

பூத்தவளேபுவனம் பதினான்கையும்

என்று துதிக்கத் தொடங்குகிறார். முன்பு, 'புவி ஏழையும் பூத்தவள்’ என்று முடித்தவர் இப்போது புவனம் பதினான் கையும் என்றார். உலகில் ஏழு தீவுகள் உண்டு; அவற்றை உலகேழு, தீவேழு. பொழிலேழு என்று சொல்லுவது வழக்கம். அவற்றையெல்லாம் அம்பிகை படைத்தாள் என்றவா, தாம் ஏதோ குறைத்துச் சொல்லிவிட்டதாக