பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் தண்ணளி 137

உலகத்து உயிர்களெல்லாம் வாழவேண்டும், உய்தி பெறவேண்டும் என்ற கருணையுடையவர் இந்தப் பரமா னந்தர். எல்லாம் அழிந்தாலும் அழியாப் பரமானந்தர் இவராகையினால், மற்றவர்களைப் போலத் தமக்கு அழிவு நேருமே என்று அஞ்சுபவர் அல்லர்; அந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள யோகம் புரியவில்லை. உலகத்து உயிர் கள் உய்யவேண்டுமானால் அருள் மலரவேண்டும். அந்த அருளே வடிவாக இருப்பவள் அன்னை. அவள் உடனி ருந்து அருள் புரியாவிட்டால் தனியிருந்து ஏதும் செய்ய முடியாத பெரியவர் இவர். ஆகையால் தம் உள்ளத்திலே எப்போதும் இவர் தம் காதவியாகிய காமேசுவரியையே எண்ணி யோகம் செய்கிறார்.

'எறி தரங்கம் - - உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!'

என்று குமரகுருபர முனிவர் பாடுகிறார். காமேசுவரர் அம்பிகையின் உருவத்தைத் தம் உள்ளத் தடத்திலே எழுதி வைத்துத் தியானிக்கிறாராம். தம்முடைய திருக்கரங் களிலே அணைப்பதற்கு முன் தம் சிந்தைக்குள்ளே அவளை அனைத்துச் சிறையிடும் பெருங்காதல் உடையவர் அவர்.

சிந்தையுள்ளே பதிப்பவர் அழியாப் பரமானந்தர்:

இவ்வாறெல்லாம். வானவரும் தானவரும் முடி தாழ்த்துக் கூட்டம் கூட்டமாக வந்து வந்திக்கவும், பிரம தேவரும் நாராயணமூர்த்தியும் தியானம் செய்யவும், சிவ பெருமான் திருவுள்ளத்திலே அன்பினால் சிறையிடவும் நிற்கும் பெருமாட்டி அபிராமி. அவளுடைய பெருமைக்கு அளவுண்டா? பலரைத் தம் ஆணையின் வழியே அடக்கி ய#ளும் பேராற்றலும் பெரும் பதவியும் உடையவர்கள்,