பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னையின் தண்ணளி 139

கத்தில் தன்னை உபாசிக்கிறவர்களிடத்தில் அவள் எளிய வளாக நின்று அருள் செய்கிறாள். மேலே சொன்ன இடங்கள்யாவும் அவள் ஏவலுக்கு அடங்கி வாழ்பவர்கள் இருக்கும் உலகங்கள். இதுவோ அவள் அருளுக்கு ஏங்கும் குழந்தைகள் வாழும் இடம். அயலார் முன்னும், உறவி னர் முன்னும் தன்னை அலங்கரித்துக்கொண்டு நாகரிக மாகவும் செல்வச் சிறப்புடனும் உலாவும் அரசியானாலும் தன் குழந்தைகளின் முன் அவர்கள் அண்டி அணைத்துக் கொஞ்சும் அன்னையாக இருப்பாள். இராஜராஜேசுவரி யும் இந்தப் பாரில் தன்னைச் சந்தித்துத் தரிசனம் செய்யும் அடியவர்களுக்கு எளியவளாக இருந்து தண்ணளி செய் கிறாள். அவளுடைய பெருங்கருணைதானே இது?

வானவர் தானவர் முதலியோர்முன் அவள் வீற்றி ருக்கும் நிலையையும், இங்கே அவள் பரிந்து கருனை பாலிக்கும் நிலையையும் ஒப்பிட்டு நோக்கும்போது இந்தக் கருணையின் உயர்வு தெளிவாகப் புலனாகிறது.

               பாரில் உன்னைச் 
  சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி கின் தண்ணளியே!

அம்பிகையைப் பார்த்து அறிவுவந்த குழந்தையாகிய அபிராமிபட்டர் பேசுகிறார்; வியக்கிறார். இப்போது ஒப்பு நோக்கிப் பார்க்கும் ஆற்றல் வந்திருக்கிறது, அந்தக் குழந்தைக்கு. 'அவ்வளவு பெரியவர்கள் அப்படியெல்லாம் செய்து உனக்குத் தாசாதுதாசர்களாக இருக்க, இந்த உலகத்தில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு எளிதில் தண்ணளி செய்கிறாயே! என்ன கருணை! என்று. பாராட்டி உருகுகிறார்.

    வந்திப் பவ்ர்உன்னை வானவர் தானவர்
       ஆனவர்கள்;
   சிந்திப் பவர்கற் றிசைமுகர் காரணர்;
      சிங்தையுள்ளே