பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩4罗 அபிராமி அந்தாதி

அதைவிட உயர்ந்தது ஒன்று உண்டு அதுதான் வீட்டின் பம். அது தேவர்களுக்கும் அரியது.

யானென தென்னும் செறுக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும்’ - என்பது திருக்குறள். இம்மை, மறுமை. வீடு என்று இந்த மூன்று நிலைகளையும் சொல்வார்கள். -

இங்கே மனிதப் பிறவியை அடைவது மிகவும் அரிய செயல். எண்பத்து நான்கு லட்ச வகையான ஜீவராசிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மனிதப் பிறவி. பல பல பிறப்புக்களை எடுத்து வர வர உயர்ந்து மனிதப் பிறப்பை எடுக்க வேண்டும். பல காலம் செய்த புண்ணியப் பயனாகவே வந்தது இந்தப் பிறவி.

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்"

என்பர் அருணகிரிநாதர். இறைவன் திருவருளைப் பெறுவ தற்கு இந்த மனிதப் பிறவி ஒன்றுதான் தகுதி உடையது. மண்ணிலே முளைத்து வானிலே பழுத்த பழமானாலும் அதன் விதை மண்ணிலே விழுந்துத்தான் முளைக்க வேண்டும் ஆதலின் இந்தப் பிறவி ஒரு வகையில் தேவர் பிறவியை விடச் சிறந்ததென்று சொல்ல வேண்டும். மனிதப் பிறவியில் புண்ணியம் செய்வதனால் சொர்க்க. பதவி கிடைக்கிறது. மறுபடியும் மண்ணில் பிறந்து

இறைவனை வழிபட்டு மோட்சம் அடைய வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களை நாம் அநுபவிக்கிறோம். எம்பெருமாட்டி யின் திருவருள் துணையிருந்தால் இந்த வாழ்வில் நலங்கள் மிகும்; துன்பமின்றி இன்பமே பெறலாம். முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக நமக்கு எல்லாம் கிடைக் கின்றன. ஆனால் அந்தத் தவத்தை இன்னது வேண்டும் என்று கருதிச் செய்தால் அதற்குச் சிறப்பு இல்லை. "தாயே"உன்னுடைய அருள் வேண்டும்' என்று வேண்