பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம் 143

டிச் செய்வதுதான் உண்மையான தவம். செல்வம் பெற்ற வன் அந்தச் செல்வத்தைக் கொண்டு வேண்டிய பொருள் களை வாங்கிக் கொள்ளலாம். உணவுப் பொருள், உறங்கு வதற்குரிய கருவிகள், உறைவதற்குரிய வீடு முதலியன எல்லாம் செல்வத்தால் கிடைப்பவை. ஒரு செல்வனை அடைந்து, எனக்கு உணவு தா' என்றும் 'எனக்கு ஆடை அளி' என்றும், எனக்கு வீடு வழங்கு' என்றும் தனித் தனியே கேட்பதைவிட எனக்குப் பெரும்பொருள் அருள்க' என்று கேட்பவன்தான் அறிவாளி. அது கிடைத் தால் இந்தப் பொருள்கள் யாவற்றையும் பெருவதோடு. இவற்றிற்கு மேலும் வேண்டியதைப் பெறலாம், அது போலவே எம்பிராட்டியிடம், அது வேண்டும், இது வேண்டும், என்று கேட்பதைவிட நமக்கு வேண்டுவன எல்லாவற்றையும் வழங்கும் திருவருளையே வேண்டிப் பெறுவதுதான் சிறந்தது. அது கிடைத்தால் எல்லாம் கிடைக்கும். இந்தக் கருத்தைச் சொல்ல வருகிறார் இந்தத் தேவியின் பக்தர்,

முதலில், எம்பெருமாட்டியின் திருவருள் பெறளத்த னையோ காலம் தவம் செய்யவேண்டும் என்று சொல்லு கிறார்.

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செயவார்.

'உன்னுடைய குளிர்ந்த அருளைப் பெற வேண்டுமென்ற வேட்கையுடையவர்களாகி அதன்பொருட்டு முற்பிறவி களில் பலகோடி வகைகளில் அமைந்த தவங்களைச் செய் யும் அன்பர்கள், என்பது இதன் பொருள். -

அம்பிகை ஆருயிர்களிடம் எப்போதும் கருணை உடையவளாகவே இருக்கிறாள். அவள் எல்லோருக்கும் தன்னுடைய அருளை வழங்கி வருகிறாள். ஆனால் அந்த அருளின் விளைவு வெவ்வேறாக அமைகிறது. தன் குழந்தை முன்னுக்கு வரவேண்டுமென்ற அன்பினால் தாய்