பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五4套 அபிராமி அந்தாதி

அவன் தவறு செய்தால் கண்டிக்கிறாள். அறிவாளியாக இருந்தால் பாராட்டுகிறாள். 'அணைப்பதும் ஒரு கை, அடிப்பதும் ஒரு கை, என்ற பழமொழி இதனைச் சுட்டு கிறது. . -

அம்பிகையின் கருணையை இரு வகையாகச் சொல் வார்கள். மறக்கருணை என்றும் அறக்கருணை என்றும். கூறுவன அவை. பக்குவம் இல்லாத உயிர்களுக்குப் பல வகையில் துன்பத்தைக் கொடுத்துச் சோதனையும் வேதனையும் உண்டாக்கி, அவற்றைத் தூய்மைபடுத்தும் அருட்செயல் மறக்கருணையினால் உண்டாகின்றவை. நெல்லில் உள்ள உமியைப் போக்க வேண்டுமானால் உரலில் இட்டு உலக்கையால் குத்தவேண்டும். நெல்லாகவே சமைக்க முடியாது. அப்படியே, பக்குவப்படாமல் பாவம் செய்த உயிர்களை அம்பிகை பிறவியாகிய உரலில் இட்டு இன்ப துன்ப அநுபவமாகிய உலக்கையால் குத்தி அரிசியாக்கி ஞானாக்கினியினிலே அன்புலையில் பக்குவ மாக்கி உண்ணுகிறாள்; தன்னோடு ஒன்றுபடுத்திக் கொள் கிறாள்.

இந்த உண்மையை அறிந்த பெரியவர்கள் துன்பம் வத்தால் அதற்கு ஏங்கமாட்டார்கள்: 'நம் பாவத்தைப் போக்க வந்த சோதனை' என்று எண்ணி மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள்; அதை வரவேற்பார்கள்.

ஹரதத்த சிவாசாரியார் என்ற பெரியவர் கஞ்சனூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் பல அரிய நூல் களை இயற்றியிருக்கிறார். வழக்கம்போல் ஒரு நாள் அந்த ஊரிலுள்ள அக்கினிபுரீசுவரர் திருக்கோயிலுக்குத் தரிசனம் செய்யப் போனார். அப்போது கோயிலில் சேவகம் சைய்யும் ருத்திரகணிகை ஒருத்தியைத் தர்ம கர்த்தர் கம்பத்தில் கட்டி அடித்துக்கொண்டிருந்தார். அதைக் கண்ட சிவாசாரியார். எதற்காக அப்படிச் செய்கிறார் கள்'? என்று கேட்டார். "ஒருவரிடமும் சொல்லாமல் நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய் விட்டாள்