பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிைங்க்ரியத்தை விட்டுவிட்டு நான்கு நாள். போன இடத்

தில் இருந்துவிட்டாள். இதனால் தண்டனை அளிக்கிறார், கள்' என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்க்ள். அதைக் கேட்டவுடனே அந்தப் பெரியவர் குலுங்கிக் குலுங்கி, அழுதார். அவர் அவ்வாறு வருந்துவதற்கு இன்னது: காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரம், வருந்திய அவர் அமைதி பெற்றபிறகு ஒருவர் அவரை. மெல்ல அணுகி, தாங்கள் இவ்வாறு வருத்தம் அடையக்

காரணம் இல்லையே! இந்தப் பெண்ணைத் தண்டித்தது. தவறு என்பது தங்கள் கருத்தா?' என்று கேட்டார்.

அந்தப் பெரியவர், அதற்காக நான் வருந்தவில்லை.

அவள் பெற்ற பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே

என்பதை எண்ணி நான் வருந்தினேன்' என்றார். அந்தக் காரணம் அவருக்கு விளங்கவில்லை "அவள் பெற்றது.

பாக்கியமா? தண்டனை அல்லவா?’ என்றார், கேள்வி

கேட்டவர். 'ஆம்; அது தண்டனை அன்று; பாக்கியம்:

இறைவனுக்குக் கைங்கர்யம் செய்யவில்ல்ையென்பதை

நினைப்பூட்டி அடித்து மீண்டும் பணி செய்ய வைக்கிறார்

கள் இவளை. என்னை இப்படி யாரேனும் அடித்து பணி

செய்ய வைத்திருந்தால் நான் எவ்வளவோ காலத்துக்கு முன்பே உய்வை அடைந்திருப்பேனே! இதனை எண்ணும்

போது எனக்கு வருத்தம் உண்டாயிற்று' என்று அவர்

சொன்னபோதுதான் அவருடைய உள்ளக்கிடக்கை புலன்ா யிற்று. இறைவனுக்குப்பணி செய்யாதவர்களை ஒறுப்பது அவர்களைத் திருத்தும் செயல் என்ற எண்ணம் அந்தப் பெரியவரிடம் இருந்தது.

ஆகவே, எம்பெருமாட்டி நாம் முன்பு செய்த தீமைக் காக இப்போது ஒறுத்துத் தூய்மை செய்கிறாள் என்பதை நினைத்தால், நாம் பெறும் துன்பங்களும் வரவேற்கத் தக்கவையே என்ற உணர்வு உண்டாகும். அது அம்பிகை யின் மறக்கருணை. . . . .

எழில்-10