பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. அபிராமி அந்தாதி

தண் அளிக்கு என்று முன்னே பல கோடி

தவங்கள் செய்வார் - மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்?

இறைவியின் திருவருளுக்காக முன்னைப் பிறவிகளின் தவம் செய்தவர்கள், இந்த நிலவுலகத்தைக் காக்கும் அரசர் செல்வத்தைப் பெறுவார்களாம். அது மட்டுமா? இன்னும் உயர்ந்த வாழ்வையும் பெறுவார்கள் என்ற குறிப்பை உள்ளடக்கி, மண் அளிக்கும் செல்வமோ பெறு: வார்?' என்றார். அந்தச் செல்வம் ஒன்றுதானா பெறு: வார்? அது மிவுெம் சாமானியமானது. அதற்கும் மேற். பட்டதை அவ்ர்கள் அடைவார்கள்' என்று மேலே சொல் கிறார். *2, -

இந்த உலகத்தில் செல்வராக வாழ்வதுவே நல்ல வாழ்வுதான். செல்வர்களிற் செல்வனாக இருப்பவன் அரசன். அரச வாழ்வு எல்லாவற்றிலும் சிறந்த இன்பம் பெறும் வாழ்வு. அதுபோலவ்ே சொர்க்கத்தில் தேவராக வாழ்வ்து சிறந்தது; இன்பமானது; சுதந்தரமானது. ஆனால் அந்த வாழ்வினும் சிறந்தது இந்திரனது வாழ்வு. இந்திரபோகம் என்றும், இந்திரத் திருவம் என்றும் மிக மிகச் சிறப்பான போகத்துக்கும் செல்வத்துக்கும் தலை யளவாக அதனைச் சொல்வார்கள். அந்த இந்திரபோக மும் எம்பிராட்டியின் தண்ணளியால் கிடைக்குமாம். மண்ணரசனாக வாழ்ந்து பின்பு விண்ணரசனாகவும் வாழலாம். x

மதி வானவர்தம் விண் அளிக்கும் செல்வமும் (பெறுவார்).

அறிவிற் சிறந்தவர்கள் வானவர்கள். மற்றப் பிராணி. களைக் காட்டிலும மனிதன் அறிவிற் சிறந்தவன். அவனை விட் மதியினிற் சிறந்தவர்கள் தேவர்கள். அவர்களுக்குப். புலவர் என்று ஒரு பெயர் உண்டு; புலம் என்பது அறிவு. அதை உடையவர்களாதலின் புலவர் என்ற பெயர்,