பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம் 151,

அம்பிகை பச்சை நிறமுடையவளாகவும் சில சமயங் களில் இருக்கிறாள். அவளுடைய இனிய சொல் கிளி மொழியைப் போல இருக்கிறது. ஆதலின் பைங்கிளியே!” என்று விளிக்கிறார். "ஓங்காரமென்னும் கூட்டில் உலாவும் கிளி' என்று பிறரும் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கிளிக்குப் பேச்சு, பாட்டு என்று வேறு வேறாகக் குரல் இல்லை. பேசினாால் அது பாட்டுப் போல இனிமையாக இருக்கும். கலைமகளின் கீதத்தைக் கேட்டு, நன்றாக இருக்கிறது' என்று சொன்ன அம்பிகையின் வாய்மொழி தன் வீணையின் இன்னொலியினும் இனிமை பொழிவதைக் கண்டு நாணி அந்த வாணி தன் வீணையை உறையிலிடு வாள் அன்றோ? அம்மையின் குரல் பண்ணைப் போல் இருக்கும். அவள் சொல் 'பண் அளிக்கும் சொல்.’

அவளுடைய திருமேனி ஞானமணம் வீசுவது. அவன் பரிமளம் வீசும் திருமேனியுடையவள். 'திவ்ய கந்தாட்யா' (லலிதா சகசிர நாமம், 631) என்பது அவளு டைய திருநாமங்களில் ஒன்று. பண்ணளிக்கும் சொல்லை யும் பரிமளத் திருமேனியையும் உடைய பெருமாட்டியைச் சியாமளா என்னும் திருநாமத்தால் அழைப்பதும் உண்டு. காளிதாஸ் மகாகவி சியாமளா தண்டகம் என்று ஒரு துதி நூல் பாடியிருக்கிறார். சியாமளை என்பது தமிழில் யாமளை என்று வரும். .

பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப்

பைங்கிளியே

எம்பிராட்டியினுடைய திருவாய்மொழியையும் திரு மேனி மணத்தையும் வண்ணத்தையும் தியானம் செய்கிறார் ஆசிரியர். பண்களையெல்லாம் உண்டாக்கும் மொழி என்றும் அவற்றைப் பாதுகாக்கும் மொழி என்றும் சொல்லலாம். அம்பிகையின் திருவுருவத் தியானத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்தச் சொல்லாகிய ஒலியும், இந்த்ப் பரிமளமாகிய மணமும், இந்தத் திருமேனிச் சோதியும்