பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈孟52 அபிராமி அந்தாதி

புலனாகும். அவற்றைத் தியானித்துத் தம்மை மறந்து சடுபட்டுக் கிடப்பதே ஒரு தவமாகும்.

தண்அளிக் கென்றுமுன்னேபல கோடி

தவங்கள் செய்வார் - மண்அளிக் கும்செல்வ மோபெறு வார்?மதி

வானவர்தம் விண்அளிக் கும்செல் வமும் அழி யா முத்தி

வீடும்அன்றோ? பண்அளிக் கும்சொற் பரிமள யாமளைப்

பைங்கிளியே!

புண்களைப் போல இனிமையைத் தரும் திருவாய் மொழியையும் திவ்ய மணத்தையும் சொண்ட சியாமளா தேவியாகிய பச்சைக்கிளி போன்ற தாயே, நின்னுடைய குளிர்ந்த கருணையைப் பெறும்பொருட்டு முன் பிறவி களில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள் இந்த உலகத் தைக் காத்து ஆளும் செல்வமாகிய அரசுரிமையை மட்டுமா பெறுவார்கள்? அறிவையுடைய தேவர்களுக்குரிய தேவலோகத்தை ஆளும் செல்வமாகிய இந்திர பதவியை :பும், பின்பு என்றும் அழியாத முத்தியாகிய வீட்டுலக வாழ்வையுமல்லவா பெறுவார்கள்?* - r ,

(பல கோடி என்றது எண்ணற்றது என்ற பொருளை உடையது. செல்வமோ என்றது, செல்வம் மட்டுமா என்னும் பொருள் உடையது வீடும் பெறுவார் அன்றோ ஒன்றுகூட்டியுரைக்க. பண் அளிக்கும்-பண்ணைப்போன்ற: ஆண்-ராகம்; அளிக்கும். உவமவாசகம். சொல்லையுடைய இr, பரிமள் யாமளைக் கிளி என்று கூட்டுக.)

அம்பிகையை உபாசிப்பவர்கள் இம்மை மறுமை விடு ,

க்ளைப் பெறுவார்கள் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதி 15ஆவது பாடல்.