பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான கருணை

அம்பிகையை எண்ணித் தவம் புரிவார் பெறும் பயன்க்ளைச் சொன்ன அபிராமிபட்டர் மீண்டும் அம்பி கையின் பெருமையை நினைக்கிறார். இனிய மொழியா லும், பச்சை நிறத்தாலும் தேவி கிளியைப் போல விளங் குகிறாள். வேதமாகிய மழலைச் சொல்லைப் பேசும் கிளி என்று குமரகுருபரர் பாடுகிறார்.

"எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலைச் - சோலைக் கிளியே!” இவற்றையெல்லாம் எண்ணிய அபிராமிபட்டர்,

கிளியே! -

என்றார். - எம்பெருமாட்டியைத் தியானம் செய்பவர்களுக்கு அவள் ஒளி வடிவமாகக் காட்சி தருவாள். பொதுவாக நாம் கண்ணை மூடிக்கொண்டால் இருட்டுத்தான் தோன் ஆறும். பல காலம் தியானம் செய்து பழகினவர்களுக்கு ஒளி தோன்றும். தேவியின் பந்துக்களாகிய அன்பர்கள் அவளு டைய தேஜோமய உருவத்தைத் தியானிக்கிறார்கள், அதனால் அவர்கள் கண்ணை மூடியவுடன் ஒளிப்பிழம் பைக் காணுகிறார்கள். - -

நாமும் ஏதாவது விளக்கையோ சூரியசந்திரரையோ பார்த்துவிட்டு உடனே கண்ணை மூடிக்கொண்டால் உள்ளே சிறிது நேரம் ஒளி தோன்றும். ஆனால் அது நெடு நேரம் நில்லாது, உண்மையான அன்பும் தியானப் பயிற்சி பும் உடையவர்களுக்கு உள்முகக் காட்சியில் ஒளி மாறாமல், நிற்கும். அம்பிகை தன் சோதி வடிவத்தை