பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அபிராமி அந்தாதி

அன்பர்கள் உளத்தே நிறுத்தி அங்கே மேன்மேலும் ஒளி விடும்படி செய்கிறாள்.

"அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்

தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே’’ என்று குமரகுருபரர் பாடுவார். அடியார்களுடைய உள் ளத்தில் ஒளிமயமாய்க் கிடந்து ஒளிர்கிறாள் தேவி.

கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே என்று ஆசிரியர் பாடுகிறார்.

தேவர்களே ஒளிமயமான திருவுருவடையவர்கள். அம்பிகையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? அப்பெரு. மாட்டிக்கு உள்ள காந்தி, காந்திமதி, தேஜோவதி, பரஞ். சோதி, ஸ்வப்ரகாசா என்ற திருநாமங்கள் அவள் ஒளிவடி வாகி நிற்பவள் என்பதைப் புலப்படுத்தும்.

அடியார் உள்ளங்களில் அடங்கி ஒளியாகிக் கிடக்கும் அம்மை உலகத்திலுள்ள ஒளிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கிறாள். ஒளி தருகின்ற பொருள்கள் மூன்று. அவற்றை முச்சுடர் என்பார்கள். சந்திரன், சூரியன், அக் கினி என்பன அவை. அன்னை அந்த மூன்றினுள்ளும் இருந்து அவற்றுக்கு ஒளி தந்து, அவை பரப்பும் ஒளிக்கு இடமாக, ஆதாரமாக விளங்குகிறாள். பாதுமண்டல மத்யஸ்தா என்றும். சந்த்ர மண்டல மத்யகா என்றும், வன் ஹிமண்டல வாஸிநி என்றும் லலிதா சகசிரநாமம் அம் பிகையைத் துதிக்கிறது. முச்சுடரின் நடுவிலும் இருந்து அவற்றை ஒளியுடையன ஆக்குகிறவள் அம்பிகையே

ஒளிரும் ஒளிக்கு இடமே! x என்றார் ஆசிரியர். கிளியென்றவுடன் உருவம் நினைவுக்கு, வரும். ஒளியென்றவுடன் காட்சிப் பொருளாகத் தோன்றி ன்ர்லும் குறிப்பிட்ட உருவம் நினைவுக்கு வராது. அம்பிகை.