பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அபிராமி அந்தாதி

கற்பனை தோன்றியது. தோல்வியுற்றவர்கள் வெற்றி அடைந்தவர்களைத் துதிப்பது வழக்கம். அவ்வாறே எந்தத் தாமரையும் அம்பிகையின் திருமுகத்துக்கு ஒப்பா காமல் தோல்வியுற்றது. இப்போது எல்லாத் தாமரை க்ளும் தம்மை வெற்றி கொண்ட திருமுகத்தைத் துதிக்கின் றன. இந்தப் பக்தரின் காதுக்கு அந்தத் துதி கேட்கிறது. போலும்! இப்போது உற்சாகமாக அம்பிகையின் ஆனனத் தைப் பாராட்டுகிறார். -

அரவிந்தம் எல்லாம் துதி சய ஆனனம். ஆம்! இந்த அழகிய முகத் தாமரையைத் தாங்கியிருக், கும் பெருமாட்டியும் கொடி போலவே ஒளிர்கிறாள். மென்கொடிபோன்ற அவள் திருமேனியின் மேலே விட்டு: விளங்கும் மலர் அவள் திருமுகம், அந்தச் சுந்தரவல்லியிற் பூத்த ஆனணமாகிய மலரை எல்லாத் தாமரைகளும், துதிக்கின்றன. . . . . .

அரவிந்தம் எல்லாம் துதிசய ஆளன. சுந்தரவல்லி. முகத்துக்கு உவமை தேடி அலைந்து கடைசியில்: ஒருவாறு உவமைப் பொருளை வென்று நிற்கும் பேரெழி லைச்சொன்ன ஆசிரியருக்கு, இனி அங்கங்களை வருணிப் பது இப்போது சாத்தியம் அன்று என்ற எண்ணம் வந்து விட்டது. . . . .

ஆயினும் அதிசயமான வடிவுடையாள் என்று தொடங்கி ஆனனத்தின் ஜய்த்தை மட்டும் சொல்லி நின்று விட்டால் அது நன்றாக இருக்குமா? அந்த உண்மையை நிறுவவேண்டுமே! வருணனையினால் அதை நிரூபிக்கும். ஆற்றல் யாருக்கும் இல்லை.

ஒரு பொருளின் பெருமையை அதனால் உண்டாகும். விளைவினால் தெரிந்து கொள்ளலாம், அெம்பிகையின் அழகின் சிறப்பையும் அந்த வகையில் சொல்லிப் பார்க்க லாம் என்று ஒரு நினைவு எழுந்தது. -