பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான வடிவு - 16 Ꮮ

அழகுக்கு அரசன் மன்மதன். அவன் மனைவி இரதியோ அழகரசி. இரதிபதியாகிய காமன் உலகத்தை யெல்லாம் தன்னுடைய கணையினால் மயக்கினான். முப்பத்து முக் கோடி தேவர்களும் அவனுடைய மோகன மலரம்பினால் காமம் அடைந்தனர். தன்னுடைய வீரத்தைத் திருமாலி னிடம் காட்டினான்; பிரமணிடம் காட்டினான்; இந்திர னிடம் காட்டினான். யாவரும் அவன் உண்டாக்கிய மயக்கத்தில் ஆழ்ந்தனர். r

இந்த வெற்றிகளைக் கொண்ட காமன் மகாதேவரி டத்திலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினான். "அவனுக்கே நம்பிக்கையில்லை. ஆயினும் தேவர்களெல் லாம் அவனைத் துாண்டினர். யோக தட்சினமூர்த்தியாக எழுந்தருளியிருந்த சிவபிரான்மேல் அவன் தன் மலரம்பை எய்தான். சிவபெருமான் விழித்துப் பார்த்தார். ஞானக் கண்ணாகிய நெற்றிக் கண்ணை விழித்தார். ஞானத்தின் முன் காமம் நிற்குமா? காமன் எரிந்தான். எல்லோரையும் தன் அம்பின் வசப்படுத்தி மயக்கிய காமனோடு அவன் வில்லும் அம்பும் அழிந்தன. அவனுக்கு அதுகாறும் எங்கும் தோல்வியே உண்டாகவில்லை. ஜயம் ஜயம் என்று இரதி பதியாகிய காமன் முழங்கினான். அத்தகையவன் இவ பெருமான் பார்த்த நெற்றிக் கண் பார்வைக்கு முன் தோல்வியுற்றான்; அவனுக்கு அபசயம் உண்டாயிற்று. சிவபெருமானை மயக் கும் ஆற்றல் அவனிடம் இல்லை. அவன் தோல்வியுற்றுத் திரும்பினானா? இல்லை; எரிந்து சாம்பலானான். பின்பு இரதிதேவி வேண்டக் கருணை கூர்ந்து அப்பெருமான். அவனை உயிர்ப்பித்தார். அவள் கண்ணுக்கு மட்டும் தோற்றும் உருவுடையவனாகச் செய்தார். - - . இரதிபதி பெற்ற வெற்றிகள் யாவும் தோல்வியுறச்

செய்த ஞானப் பார்வையை உடையவர் சிவபெருமான்.

துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர். எழில்-11