பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனும் காலும்

அம்பிகையின் தியானத்திலே ஈடுபட்டவர் அபிராமி பட்டர். சென்ற பாட்டில், அம்பிகை இறைவனுடைய வாமபாகத்தை வவ்விய செய்தியைச் சொன்னார். அர்த், தேசுவர நாரியாக எம்பெருமாட்டியைத் தியானித்தார். ஆம்; இவர் அபிராமியின் பக்தராதலின், சிவபெருமான் தம் வாமபாகத்தில் அம்பிகையை வைத்திருக்கிறார்' என்று சொல்லாமல், அவர் வாமபாகத்தை அம்மை எடுத்துக் கொண்டாள்'.என்கிறார், அருணகிரிநாதரும். இப்படிச் சொல்வார்.

ஒருவரைப் பங்கில் உடையாள்'

"த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி."

இப்போது, இருவரும் ஒருவராம் அந்த வடிவத்தை நினைக்கிறார்; 'எனக்கு அந்தத் திருவுருவத்தோடு காட்சி தரவேண்டும்' என்று பிரார்த்திக்கிறார்.

சிவபெருமானும் அம்பிகையும் ஒருவருள் ஒருவராக மறைந்திருக்கும் சமயமும் உண்டு; பாதி பாதியாக இணைந்திருக்கும் செவ்வியும் உண்டு; தனித்தனியாக இருந்து கணவன் மனைவியாக வீற்றிருக்கும் திருக்கோல மும் உண்டு. வாம பாகத்தை வவ்வியது அர்த்த நாரீசுவ, ரத் திருக்கோலம். உலகம் தோற்றுவதற்குமுன் இந்தக் கோலத்தில் இறைவன் வெளிப்படுகிறானாம். பிறகே தத்துவங்கள் தோன்றுகின்றன என்று பெரியவர்கள் சொல். வார்கள். சங்க நூலாகிய ஐங்குறு நூற்றின் கடவுள் வணக்கப் பாடல் மாதிருக்கும் பாதியனையே பாடுகிறது.