பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்னும் காலும் 167

என்னும் மமகாரமும் மக்கள் உள்ளத்திலிருந்து எளிதில் நீங்குவதில்லை. • ,

'யான்என தென்னும் செறுக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்.' - . . .

என்ற குறளில், இந்த இரண்டும் அற்றவர்கள் முத்தியின் பம் பெறுவார்கள் என்ற கருத்தைக் காண்கிறோம்.

நாம் இரவிலே போய்க் கதவைத் தட்டுகிறோம். 1 யார்?' என்று உள்ளே இருப்பவர்கள் கேட்டால், நாம் பெயரைச் சொல்லாமலே, நான்’ என்கிறோம். மறு படியும், 'யார்?' என்று கேள்வி எழுந்தால், "நான்தான்' என்று அழுத்திச் சொல்கிறோம். அகங்காரமே நானாகவும் தானாகவும் வடிவெடுக்கிற்து: *

வேடிக்கையாக ஒரு கருத்தை இங்கே சொல்லலா மென்று எண்ணுகிறேன். நாம் உண்ணும் உணவில் குழம்பு என்றும் ரஸ்ம் என்றும் இரண்டு வியஞ்சனங்கள் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து குழம்பியது குழம்பு. குழம்பிற்கும் ரஸத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன? குழம்பில் தான் இருக்கும்; ரஸத்தில் அது இல்லை. ஆன்மிக வாழ்விலும் இப்படி ஒன்று உண்டு. தான் இருந்தால் குழப்பம் அல்லது குழம்பு உண்டு; மனம் ஐயத்திலே சிக்கிக் குழம்பும். தான் இல்லாவிட்டால் ரஸம் தோன்றும்.

அகந்தை ஒழிந்தால் இன்பம் பெறலாம். அதை எப்படி ஒழிப்பது? தெய்வத்தைத் தியானம் செய்வதனால், அதனை ஒழிக்கலாம். அபிராமியின் திருவடியை எண்ணி எண்ணி இந்த அகந்தையினின்றும் நீங்கியவர் ஆசிரியர். அந்த அநுபத்தைச் சொல்கிறார்.

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும்.