பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அபிராமி அந்தாதி

எனக்கு இருந்த அகந்தையைப் போக்கி என்னை ஆளாகக் கொண்ட பொலிவு பெற்ற திருவடி என்று நினைக்கிறார்.

அம்பிகைக்கு ஆளான பிறகு துன்பமே இல்லாத இன்ப வாழ்வு உண்டாகிறது. மனம் நிர்மலமான பிறகு அகந்தை இல்லை: மமகாரம் இல்லை; கவலை இல்லை, ஆயினும் இந்த வாழ்வின் இறுதியிலே மரணம் என்ற பெரிய துன்பம் ஒன்று இருக்கிறதல்லவா? அது வரும் போது சிறிதும் கவலையின்றி இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் ஜீவன் முக்தர்கள்.

இந்தப் பக்தர், 'அம்மா, அந்த இறுதிக் காலத்தில் இப்போது என்னை ஆண்ட பாதம் வந்து காப்பாற்ற வேண்டும்' என்று இந்தப் பாட்டில் வேண்டிக்கொள் கிறார்.

'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்' என்று ஆழ்வாரும்.

"மாகத்தை முட்டி வரும்நெடுங் கூற்றன்வந் தாலென் - முன்னே - - தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்' என்று அருணகிரிநாதரும், இப்படியே வேறு பலரும் இத்தகைய விண்ணப்பத்தைச் செய்திருக்கிறார்கள்.

மிகவும் கொடியவனாகிய யமன் உயிரை உடம்பி னின்றும் பிரிப்பதற்காக டிரண காலத்தில் என்னைப் பற்ற வரும்போது நீ என்முன் பிரத்தியட்சமாக எழுந்தருளிக் காப்பாற்ற வேண்டும்' என்பது இவ்வாசிரியர் செய்து கொள்ளும் வேண்டுகோள்.

வெவ்விய காலன் என்மேல் வரும்போது

வெளிநிற்கவே! 'அர்த்தநாரீசுவரக் கோலத்தோடு வரவேண்டும்’ என்று சொன்னவர், திருமணக் கோலத்தோடு வர