பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனும் காலும் ·五6座。

வேண்டும்' என்றார்; பிறகு, என்னையாண்ட பொற் பாதத்தோடு வரவேண்டும் என்று சொல்லி முடித்தார்,

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும்

ஆகி வந்து - வெவ்விய காலன் என்மேல் வரும்போது

வெளிநிற்கவே. -

முதலில் அர்த்தநாரீசுவரத் திருவுருவத்தை நினைத் தார். அம்பிகையின் பக்தராகையால். ஒட்டி நின்ற அந்தக் கோலத்தின் ஒரு பாதி முழுமையாக வளர்ந்து நின்ற திருமணக்கோலத்தை நினைத்தார்; அம்பிகையின் திருவுருவில் உள்ள பல அங்கங்களிலும் பக்தருக்குப் பற்றுக் கோடாக இருப்பது திருவடி. அது இப்போது அவ்வியம் தீர்த்து ஆண்டு கொண்டிருப்பது; ஆதலின் அதனோடு தொடர்புடைய அடியவர் அந்த அடியை இறுதியிலே சொன்னார், - -

திருடன் வருவான் என்று அஞ்சிய ஒருவன் போலீஸ் அதிகாரியை உதவிக்கு அழைக்கிறான். 'ஐயா, நீங்களும் உங்கள் சேவகனுமாக வாருங்கள். ரிவால்வாரோடு வாருங்கள்' என்று சொல்கிறார். ரிவால்வர்தான் : திருடனை ஒறுக்க ஏற்ற கருவி. அதுபோல இவர் பாடுகிறார்.

காலனை ஒட்டுவதற்கு அம்பிகையின் திருவடிதான் தக்க துணை. திருக்கடவூர் காலசங்கார rேத்திரம். சிவபெருமானே காலனை உதைத்தார். அவர் தம் இடக்காலாலே காலனை உதைத்தார். அந்த வாமபாகம் யாருடையது? அம்பிகையினுடையது. நுட்பமாக ஆராய்ந்தால், காலனை உதைத்துக் காலப்யத்தை நீக்கியது அம்பிகையின் திருவடியென்றே சொல்ல வேண்டும். ஆகவே காலனால் வரும் துன்பத்தைப் போக்க வேண்டும் என்று சொல்ல வரும்போது அந்தப் பொற்பாதத்தை இறுதியிலே சொல்வி வற்புறுத்தினார்.