பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அபிராமி அந்தாதி

ஒர் ஏழைக்கு மற்றோர் ஏழையினிடம் இரக்கம் பிறக் கிறது. அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறான். எண்ணி என்ன பயன்? அவனு டைய கருணை மனத்தளவில் நின்றுவிட வேண்டியது தான். அவனும் ஏழையாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பணக்காரனாக இருப்பவனுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் சக்தி இருந்தாலும் கொடுக்க வேண்டும் என்ற இரக்கம் இல்லாவிட்டால் ஏழைக்குப் பயன் இல்லை. ஆகவே ஆற்றலும் வேண்டும்; இரக்கமும் வேண்டும். இறைவனிடம் இந்த இரண்டும் உள்ளன.

உயிர்க்கூட்டங்களின் மனமும் வாக்கும் இறைவனை அணுக முடியா. மனம் எண்ணவும் வாக்குப் பேசவும் வேண்டுமானால் உருவமும் பெயரும் வேண்டும். மனமும் வாக்கும் அவனை அணுகா என்பது உண்மை. ஆனால் அவன் ஆற்றலாலும் கருணையினாலும் மனத்தையும் வாக்கையும் அணுகுகிறான். அவனுடைய திருவருள் துணையினால் அவன் திருவுருவத்தைக் கண்ட பெரியார் கள் தாம் கண்டதைப் பிறரும் தெரிந்து வழிபட விக்கிர கங்களிலும் ஒவியங்களிலும் உருவாக்கிக் காட்டச் செய்கி

றார்கள்.

"அவனருளே கண்ணாகக் காணின் அல்லாய்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவன் இறைவன் என்றுஎழுதிக் காட்டொ ணாதே' என்று அப்பர் சுவாமிகள் கூறுவார்.

'அருட் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே'

என்றும் அருளுவார். ஆகவே அருட்கண்ணினால் இறைவன் தேசுத் திருவுரு வத்தைத் தரிசித்து இன்புற்றவர்கள், நாமும் புறக் கண்ணால் கண்டு வழிபட்டு இன்பம் அடையும்படி அந்த உருவத்தை அமைக்கச் செய்தார்கள். முதலில் அகத்தே கண்ட திவ்ய வடிவத்தைப் பிறகு புறத்தே வடிக்கச்