பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம். 1የ፰ ̆

செய்தார்கள். தாம் அந்த வடிவத்தை முதலில் கண்ணால் கண்டு பிறகு மனத்திலே பதித்தால் முறுகிய பயிற்சியின் விளைவாக அந்தத் தேசுத்திருவுருவத்தை அகக்கண்ணி. னால் தரிசிக்கும் பேறு நமக்கும் கிடைக்கும். அகக்கண்ணில் கண்டவர்கள் முகக்கண்ணுக்குக் காட்டினார்கள். இப் போது முகக்கண்ணில் கண்டவர்கள் பின்பு அகக்கண்ணில் காணும் நிலை பெற வேண்டும்.

ஆலயங்களிலுள்ள மூர்த்திகளைத் தரிசிக்கிறோம். மற்றக் காட்சிகளை மறந்து இறைவன் திருவுருவத்தையே. கூர்ந்து கண்டு இன்புற வேண்டும். பல நாட்களாகப் பிரிந்: திருந்த கணவனைக் கூட்டத்தில் கண்ட மனைவி மற்ற வர்கள்பால் பார்வையை ஒட்டாமல் அவனையே பார்ப்பது: போல் பார்க்க வேண்டும். இந்த ஒருமைப்பாடு நமக்கு. எளிதிலே கிடைக்காது. தீபாராதனை செய்யும்போது இறைவன் திருவுருவத்தைத் தரிசித்து நன்றாகப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த உருவத்தை மனத்தில் பதிக்க வேண்டும். புறத்திலே கண்டதை அகத்திலே ஒரு கணம் நினைக்கலாம். நிலையாக அதை வைத்துப் பார்ப்பது எளிதில் முடியாது. ஆகவே இடை விடாமல் புறத்தே கண்ட திருவுருவத்தை அகத்தே நிறுத்தி நிறுத்திப் பயில வேண்டும். இந்தத் தியானச் சிறப்பினால் உள்ளத்திலே புகுந்த அந்த வடிவம் உயிரோவியமாகவும் சுடருருவமாகவும் மாறும். சாமான்யமாக இருந்த அப்பளம் கொதிக்கும் எண்ணெயில் போட்டவுடன் விரிந்து வெளுத்துச் சுவை பெறுவது போல, புறத்தே கண்ட உருவத்தை உள்ளத்தே அன்புடன் வைத்துத் தியானம் செய்தால் அந்த உருவம் விரிந்து மலர்ந்து ஒளி வடிவமாக மாறும். அப்பால் இன்ப அனுபவம் தலைப் படும். விக்கிரக வழிபாட்டின் பயனே இந்த உண்முக அநுபவந்தான். இதற்கு முதற்படியே ஆலய வழிபாடு பூஜை முதலியன. ஆகவே விக்கிரகத்தை வழிபட்டாலும்,