பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அபிராமி அந்தாதி

நெஞ்சில் தேவியின் திருவுருவம் தெளிவாகத் தெரிகின்ற அநுபவம் இருந்தால் அந்த நெஞ்சில் அழுக்கில்லாத தெளிவு இருக்கிறது என்றே கொள்ள வேண்டும்.

கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது

என்கிறார் ஆசிரியர். கண்ணிலே அபிராமியின் அழகுத். திருமேனியைப் பார்த்துக் களிகொண்டார். அப்பால் கருத்திலே பார்த்துக் கரைகாணா ஆனந்த வெள்ளத்திலே ஆழ்ந்தார். அப்போது கருத்தானது, தெளிவான ஞானம், திரம்பியதாயிற்று. -

ம்பெரு,

இந்த அநுபவம் எப்படி வந்தது? எல்லாம் எ

- அவள்

மாட்டியின் திருவருளால்தான் உண்டாயின. இந்த குழந்தையின் உள்ளத்தில் நம்மைத் தரிசிக்கச் செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டாள். கண்ணிலே காணும் காட்சியோடு நின்றிருந்தால் இந்த அநுபவம் வந்திராது. அதற்குமேல் உண்முகக் காட்சி பெற்றார். தெளிந்த ஞானம் பெற்றார். இவ்வளவும் அம்பிகையின் அருளால் விளைந்தவை. இந்த அநுபவமே முடிவான பேரின்ப அநுபவமன்று. இன்னும் அம்பிகை மேலான அநுபவங்களைத் தருபவள். 'இந்த அளவு வரைக்கும் என்னை இழுத்துவந்து ஆனந்த வெள்ளத்தில் அமிழ்த்திய பிராட்டி இன்னும் என்ன என்ன பெரு. வாழ்வை வழங்கத் திருவுள்ளம் கொண்டிருக்கிறாளோ!' என்று அதிசயத்தோடு எண்ணிப் பார்க்கிறார்.

கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது:

என்ன திருவுள்ளமோ!

s' தம் அநுபவ அதிசயத்திலே நின்று பாராட்டியவர் அம்பிகையைப் பற்றிச் சொல்கிறார். கரசரணாதி.