பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் lol

யிருக்கிற புனிதமான திருக்கோயில் நின்னுடைய பதியின் ஒருபக்கமோ?' என்று கேட்கிறார். -

உறைகின்ற கின் திருக்கோயில்

கின் கேள்வர் ஒரு பக்கமோ? * , - வாமபாகத்தை வவ்வியவளாதலின், அந்தப் பக்கத் தையே எண்ணுகிறார். ஒரு ப்க்கமாய பரம்பரன் தேவி' (245) என்பது தக்கயாகப்பரணி. அம்பிகைக்கு ரீகண் டார்த்த சரீரணி என்ற திருநாமம் இருப்பதை லலிதா சகசிரகாமத்திற் காணலாம். - -

அபெளருஷேயமென்றும் அநாதியென்றும் வேதத்தைச் சொல்வார்கள். அது மிக மிகப் பழமையான நூல்; அம்பிகையைப்பற்றி முதல் முதலாகத் தெரிவிக்கும் நூல் அதுதான். பிறகு அதிலிருந்து பல நூல்கள் விரிந்தன. அம்பிகை வேதத்தை அருளியவள்; வேதவடிவாக இருப் பவள்; வேதத்தின் பொருளாக விளங்குபவள்; வேதத்தின் தொடக்கமாகிய, அடியாகிய, ஓங்காரத்தில் இருப்பவள்; ஒங்காரம் என்னும் கூட்டில் இருக்கும் கிளியாக அவளைச் சொல்வார்கள்; ஆதலின் அடுத்தபடி,

அறைகின்ற நான்மறையின் அடியோ?

என்றார்.

வேதத்தின் சாரமாகவும் முடியாகவும் இருப்பவை உபநிஷத்துக்கள். அவற்றை வேதாந்தம் என்று சொல் வார்கள். ஞானபாகமாக விளங்கும் அப்பகுதியில் அம்பிகை இருக்கிறாளாம். அவள் இருந்தால்தானே ஞானம் ஒளிரும்? - -

அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ?

அம்பிகை வேதத்தின் ஆதியாகவும் அந்தமுமாக நிற்கிறாள் என்று முன்பு பாடினார்.