பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fsö அபிராமி அந்தாதி

அவள், ஓரிடத்திலிருந்து ஓரிடத்துக்குப் போகாதவள்: அவள் எங்கும் இருப்பவளாதலின் இந்தச் சலனம் அவளுக்கு இல்லை. அப்படியே காலத்தினாலும் சலனம் இல்லாதவள்; அசலை.

யாமல் இருக்கிறவள். மங்களாக்ருதி, ஸாமங்கலி என்பவை: அவளுடைய திவ்யத் திருநாமங்கள். -

எங்கும் நிறைந்த பூரணை, சலனம் இல்லாத அசலை, என்றும் மங்கலத்தோடிருக்கும் மங்கலை என்ற இந்த மூன்றையும் இணைத்துக் கடிைசியில் அம்பிகையை விளிக் கிறார்.

பூரணாசல மங்கலையே!

பூரணமங்கலை, அசலமங்கலை என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம். அசலமங்கலை என்பதற்கு மலை ராஜனுக்கிருகண் மணியாய் உதித்துமலை வளர் காதலிப் பெண்ணாகிய பார்வதி என்று பொருள் கொள்வதும் பொருந்தும். - - உறைகின்ற கின்திருக் கோயில்கின்

அறைகின்ற நான்மறை யின்அடி யோ?முடி யோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்க ளோகேஞ்ச மோ? என்றன் நெஞ்சகமோ? மறைகின்ற வாரிதி யோ?பூர

(எங்கும் நிறைந்தவளாயும் தளர்ச்சியற்றவளாயும் நிறைந்த மங்கலம் உடையவளாயும் உள்ள அபிராமி அன்னையே, நீ எழுந்தருளியிருக்கின்ற நின்னுடைய அழ, கிய கோயில், நின் பிராண நாதராகிய சிவபிரானுடைய ஒரு பக்கமாகிய வாமபாகமோ? உன் புகழைச் சொல்கின்ற.