பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 அபிராமி அந்தாதி.

'அரவின் அமளியின் அகில பணமணி

அடைய மரகதம் ஆன ஒர் இரவி வெயில்இலன்; மதியும் நிலவிலன்; இறைவி ஒளிவெளி எங்குமே' என்று தேவியின் மரகதச் சோதியைத் தக்கயாகப்பர (166) வருணிக்கிறது. . . 'பச்சை எறிக்கும் ப்ரைபயன்', 'தெரிவரும் சுத்தப் பச்சை நிறப்பெண் என்பன திருப்புகழ்.

பச்சை நிறமுடைமையின் அம்பிகைக்குச் சியாமளா என்ற திருநாமம் உண்டாயிற்று.

அநாஹத சக்கரத்தில் பன்னிரண்டு இதழ்களை யுடைய தாமரையில் இரண்டு முகங்களுடன் இருக்கும் ராகிணியின் நிறம் பச்சை, ச்யாமாபா என்பது அவளுக் குரிய நிறத்தைப் புலப்படுத்தும் திருநாமம் அந்தக் கோலத்தை எண்ணியது என்றும் சொல்லலாம்.

பச்சை நிறத்தைச் சொன்மையின் அந்நிறமுடைய கோடியைப் போன்றவள் என்று கூறினார்.

மங்கலம் மங்காதவளாகவும், செங்கலசம் போன்ற நகிலும் வளைகளையுடைய கைகளும் உடையவளாகவும், மலைமகளாகவும், சகல கலா மயிலாகவும். சிவபெருமா னுடைய ஒரு பக்கத்தை ஆளுபவளாகவும் இருக்கும் தேவி, பிங்கலை முதலிய ஐந்து வண்ணமுடையவளாக விளங்கு கிறாள் என்று வாக்கிய முடிவு செய்து கொள்ள வேண்டும்,

  • ஈசுவரியுடைய திருமேனிச் சோதிப் பசுமையாலே, தான் எழுந்தருளியிருந்த நாகராசா படம் ஆயிரத்திலும் உள்ளவான ஆயிரழ் விற்பிடி மாணிக்கங்களும்தம் சிவப்புக் கெட்டு மரகத ரத்தினமாயின.இனி மற்றுரைப்பது என்? ஒப்பற்று,ஆதித்தனும் சோதியிலன்; சந்திரனும் அது வண்ணமே உலகம் அடங்கத் தேவியுட்ைய சோதிய்ே எங்கும் பிரகாசித்தது, என்பது இதன் ப்ழைய உரை.