பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவா வரம்

அம்பிகையின் புகழிலே ஊறிக் கிடந்தது அபிராமி பட்டரின் நெஞ்சம். அவளுடைய வடிவையும் வண்ணத். தையும் தியானித்து அவர் பாடினார். இன்னும் அவருடைய வியப்பு மாறவில்லை. 'பசும் பெண் கொடியே’ என்று நிறுத்தினவர் அந்தக் கொடியை மறுபடியும் புகழத். தொடங்குகிறார். o

அவள் மென்மையே வடிவானவள் கோமளாங்கி, என்றும் லலிதா என்றும் திருநாமங்களைப் பெற்றவள்; ஆதலின் கொடி போன்றவள். எந்த அடையும் இன்றிக் கொடியே என்றால் போதுமே என்று தோன்றுகிறது.

கொடியே!

என்றார். ஆம், கொடி தளர்ந்து ஒசிந்து நிற்பதுபோலவே

அம்பிகை நிற்பாள். அவள் உயிர்க்கூட்டங்களுக்கு இரங்கிக் கருணையினால் நெகிழ்ந்து விளங்குபவள். பொதுவாகப் பெண்களை அம்புஜவல்லி, சண்பகவல்லி என்று கொடிகளின் பெயரை வைத்து அழைப்பது. வழக்கம். எம்பெருமாட்டி இத்தகைய வல்லிகள் யாவரி னும் சிறந்த கொடியாக இருக்கிறவள். ஆதலின் அவளுக்கு. அடையே வேண்டாம்.

ஆயினும் மரபை ஒட்டி ஒரு நினைவு வந்தது. தண்மைக்கும் மென்மைக்கும் சிறந்தது வஞ்சிக்கொடி. அதைப் பெண்களுக்கு உவமை கூறுவது வழக்கம். அம்பிகை வஞ்சுளவல்லிபோல இருக்கிறாள்; ஆதலின் அடுத்தபடி,