பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 அபிராமி அந்தாதி

பிறப்புத் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக் கும். ஆதலின் இனிமேல் நான் பிறவாத நிலை பெறும் :படியாக நீ என்பால் எழுந்தருளி என்னை ஆண்டுகொள்ள வேண்டும். ஆட்கொண்டால் அப்பால் பிறவி இல்லை என்பது உறுதி.'

பெரியவர்கள் யாவரும் கேட்டுக் கொள்ளும் பிரார்த் தனை இது. -

'பிறவா திருக்க வரந்தர வேண்டும்' என்று பட்டினத்தார் பாடினார். அபிராமிபட்டரும் அந்த வரத்தையே வேண்டுகிறார்.

- கொடியே, இளவஞ்சிக் கொம்பே,

எனக்குவம் பேபழுத்த :படியே, மறையின் பரிமள மே, பனி மால்இமயப் பிடியே, பிரமன் முதலாய

தேவரைப் பெற்ற அம்மே, அடியேன் இறந்திங்கு இனிப்பிற

வாமல்வந்து ஆண்டுகொள்ளே. (கொடி போன்றவளே, இளைய வஞ்சிமரத்திலுள்ள பூங்கொம்பு போன்றவளே, எனக்குப் ப்க்குவம் இல்லா விட்டாலும் அதன்ை எண்ணாமல் காலம் அல்லாத காலத் தில் பழுத்த இன்பக் கனியின் திருவுருவமே, வேதமென் லும் மல்ரில் பூர்விய மணம்போல் இருப்பவளே, பனியை யுடைய பெரிய இமயமலையில் உலாவிய பிடிபோன்ற வளே, பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற தாயே, ஆடியேன் இப்போது இறந்து, அப்பால் இந்த உலகத்தில் மீண்டும் வந்து பிறவாமல் இருக்கும்படி நீயே கருணையி னால் என்பால் எழுந்தருளி ஆளாகக் கொள்ள வேண்டும். வம்பு-புதுமை: வழக்கமல்லாத புதுமை. படி-உருவம்.) அம்பிகையை நோக்கிப் பிறவா வரம் தர வேண்டும். என்று கேட்கிறார். இதனால்.

இது அபிராமி அந்தாதியில் 22-ஆவது பாடல்.