பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206. அபிராமி அந்தாதி

தேய்வத்தின் கோலங்களும் பலவாக இருக்கும். ஆயினும் அவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டுத் தியானிப்பான்.

அபிராமிபட்டர் அபிராமியின் திருக்கோலமல்லாமல் வேறு ஒரு கோலத்தைத் தம் மனத்தே கொள்ளவில்லை.

கொள்ளேன் மனத்தில் கின் கோலம் அல்லாது. இது மற்றத் தெய்வங்களினிடம் பகை பாராட்டும் இயல்பு அன்று. உண்மையைச் சொல்லப் போனால் அவருக்கு அம்பிகையின் கோலங்கள் பல இருப்பினும் அவற்றில் அபிராமியின் திருவுருவக் கோலம் ஒன்றே தியானிப்பதற்குரிய பொருளாக நின்றது. அப்படியானால் அம்பிகையின் மற்றக் கோலங்களை அவர் விரும்பவில்லை. என்று சொல்லலாமா? ஓரிடத்திலே கிணறு வெட்டுவதைப் போல, குழந்தை பசி வந்தால் தன் தாயை நாடிச் சென்று பால் குடிப்பதுபோல, அபிராமியின் திருக்கோலத்தையே மனத்திலே பதித்துத் தியானம் புரிந்தார் அபிராமிபட்டர்.

குழந்தை தாயினிடம் எப்போதுமே இருக்கிறதில்லை; பால் குடிக்காத சமயங்களில் மற்றவர்களிடமும் அது இருக்கிறது. தந்தையிடமும், அத்தையிடமும், அண்ணனி டமும், அக்காளிடமும் விளையாடுகிறது. வீட்டிலுள்ள யாவரும் குழந்தைக்கு மாறி மாறி விளையாட்டுக் காட்டு கிறார்கள். ஆனால் அயலாரைக் கண்டால் குழந்தை போவதில்லை. அவர்கள் எவ்வளவு ஆசையாகக் குழந்தையை எடுத்துக் கொள்ள வந்தாலும் போகிற தில்லை. தன்வீட்டுக்காரரோடு, தன் தாய்க்கு வெவ்வேறு வகையில் உறவினராகத் தன் வீட்டில் வாழும் மக்களோடு பழகி இன்புறுகிறது. -

அன்பர்களும் தம்முடைய தியானமூர்த்தியோடு 2.ந வான அடியார்களின் கூட்டத்தோடு சேர்ந்திருப்பதையே, விரும்புவார்கள். அவர்களை விட்டுப் பிரிந்து வேறு வகை,