பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாடு 207.

யான கூட்டத்திலே சேருவதற்கு அவர்கள் அஞ்சுவார்கள். அபிராமிபட்டர் அம்பிகையின் அன்பர் கூட்டத்தினின்றும் என்றும் பிரியாமல் வாழ்ந்தார். . . . .

அன்பர் கூட்டங்தன்னை விள்ளேன்.

இவ்வாறு இருப்பதால் தொண்டர்களின் பக்தி மேலும் உரம் பெறுகிறது. மனிதன் சங்கத்தைச் சார்ந்து, சார்புக்கேற்ற பழக்க வழக்கங்களைக் கொள்கிறவன். நல்லவர்கள் கூட்டத்திலே பழகுபவனுக்கு அவனை அறியா மலே தீய பழக்கங்கள் விலகி, நல்ல பழக்கங்கள் உண்டா கும். அம்பிகையினிடம் பக்தி பண்ணுகிறவர்கள் சாதனம் செய்து வரும் காலத்தில் அவர்களுடைய பக்தியைக் குலைக்கும் வகையில் பல இடைஞ்சல்கள் வந்து நேரலாம். அதனால் மனம் தளர்ந்து பக்தியின் உரம்குறைந்து போக லாம். பக்தி மாறாமல் இருக்க வேண்டுமானால் தக்க பாதுகாப்பு வேண்டும். அடியார்களுடைய பழக்கம் அந்தப் பாதுகாப்பைத் தரும் பக்தியே இல்லாமல் இருப் பவர்களும் அடியார்களின் கூட்டத்தில் சேர்ந்துவிட்டால் அவர்களை அறியாமலே பக்தி உண்டாகும், பக்தி கொண் டவர்கள் தொண்டர் கூட்டத்தில் இருந்தால் அந்தப் பக்தி மேன்மேலும் வளரும்.

ஆதலால் அம்பிகையைத் தியானம் பண்ணும் சாதனத் தில் ஈடுபட்ட அபிராமிபட்டருக்கு அது சிறந்த பயன்தரும் வகையில் அமைவதற்கு ஏற்ற பாதுகாப்புக் கிடைத்தது. தொண்டர் கூட்டத்தின் நட்புக் கிடைத்தது. அதனால் அவர் பக்தி மேன்மேலும் வளரலாயிற்று.

வீதிக்கு நடுவில் விளக்கை ஏற்றி வைத்தால் அது நிற்காது. சுவர்களால் பாதுகாப்புடைய அறையில் ஏற்றினால் அது தளராமல் எரியும். உள்ளத்தே அம்பிகை -யின் திருவுருவை வைத்துத் தியானம் செய்பவருக்கு அத்தத் தியானத்துக்குத் தீங்கு நேராத சூழ்நிலை அமைத்