பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zos அபிராமி அந்தாதி

தது. அன்பர்களின் கூட்டத்தில் அவர் இருந்தார். அவர் கிளை விட்டு நீங்காமல், அவர்களில் ஒருவராகக் கலந்து, நின்றார்.

கொள்ளேன் மனத்தில் கின் கோலம் அல்லாது;

அன்பர் கூட்டங்தன்னை விள்ளேன். உறவினர்களின் கூட்டத்தை விட்டு விலகாத குழந்தை, தன் வீட்டை விட்டு வெளியேறவும் அஞ்சும். அப்படியே. உபாசனா தெய்வத்தைத் தியானம் செய்யும் பக்தன் அத் தெய்வத்தின் அடியார்களோடு உறவு கொண்டாடுவான், . வேறு சமயத்தில் நாட்டம் இராமல் இருப்பான்.

எந்தச் சமயத்தில் இருந்தாலும் உய்ய வழி உண்டு. இயல்பாக நமக்குக் கிடைத்த சமயத்தைப் பற்றிக்கொண்டு. அதன் நெறியிலே நின்று ஒழுகினால் நிச்சயமாக நலம் கிடைக்கும். ஆகவே தான் கைப்பிடித்த சமயத்தினின்றும். பிறழாமல் வாழ்வது பக்தன் கடமை. தான் நம்பி வாழும் தெய்வத் தியானத்தாலும், அடியார் கூட்டுறவினாலும் அநுபவத்தில் நன்மையைக் கண்டவன் வேற்றுச் சமயத்தில் புக வேண்டும் என்ற ஆசையைக் கொள்ள மாட்டான்.

பரசமயம் விரும்பேன் இவவாறு அபிராமிபட்டர் தாம் ஒன்றையே விரும்பி ஒன்றையே துணிந்து ஒன்றையே உள்ளடைத்த வகையைச் சொன்னார். அபிராமியின் திருக்கோலத்தைத் தியானித்து, அவளுடைய பக்தர்கள் கூட்டத்தைச் சார்ந்து வாழ்ந்து, அந்த வைதிக சமயத்தையே பற்றிக் கொண்டு நின்றார். -

அவருக்கு ஓர் உண்மை தெரியும். ஆயிரம் ஆயிரம் கோலம் எடுத்து அன்பர்களுக்கு அருள்புரிய வரும் அம்பிகை எங்கும் நிறைந்தவள் என்பது அவருக்குத் தெரியும். அவள் இவ்வுலகத்திலுள்ள எல்லாப் பொருள்