பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அபிராமி அந்தாதி

கொண்டு உள்ளத்தே தியானப் பொருளாகப் புகுகிறாள். அதன் பயனை அன்பர்கள் நுகர்கிறார்கள். வெளியிலே நின்றால் காற்றின் சுகத்தைப் பெறாதவர்கள் நுழை வாயி லில் நின்று அதன் வேகத்தினால் இன்பம் பெறுவதுபோல, தியான முர்த்தியினால் இன்பம் பெறுகிறார்கள் உபா சகர்கள். - X- in , -

அந்த இன்பத்தை அபிராமியட்டர் சொல்ல வருகிறார். எப்படிச் சொல்வது? அம்பிகையைத் தியானம் பண்ணி னால் பழைய உணர்வே மாறிவிடுகிறது. உலக எண்ணம் மங்கிப் போகிறது. மதோன்மத்தமான நிலை உண்டா கிறது. கள்ளைக் குடித்தவன் பழைய நிலையை மறந்து நிற்பதுபோலே ஒருவகைப் போதையிலே நின்று தடுமாறும் உணர்ச்சி அமைகிறது. அம்பிகையை உள்ளத்தே தியா னிப்பதனால் இந்த இன்பம் விளைகிறது. உள்ளே விளைந்த ஆனந்தத் தேனாக, அமுதக் கள்ளாக அவள் இருக்கிறாள். W

உள்ளத்தே விளைந்த கள்ளே! -- இந்தக் கள்ளை உண்டதனால் ஒரு விதமான இன்ப மயக்கம் ஏற்படுகிறது. கள்ளைக் குடிப்பதனால் உண்டா கும் மயக்கத்துக்குக் களி என்று பெயர். இந்தக் கள்ளால் உண்டாகும் ஆனந்த அநுபவமும் ஒருவகைக் களியே ஆகும். அம்பிகையே ஆனந்த உருவாக இருக்கிறவள் அல்லவா? - -

களிக்கும் களியே! . இவ்வாறே அம்பிகையின் தியானத்தினால் விளையும் பேரானந்த நிலையைக் குமரகுருபரர் மீனாட்சியம்ை பிள்ளைத் தமிழில் பாடுகிறார். -

'உருகி உருகி நெக்குநெக்குள்

உடைந்து கசிந்திட் டசும்பூறும் உழுவ, லன்பிற் பழவடியார் -

உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப்